உருளைக்கிழங்கு மிளகாய் 65( potato 65)
உருளைக்கிழங்கு 65 ( Potato 65 ) என்பது ஒரு கிரிஸ்பியான, காரசாரமான, சூப்பரான வெஜ் ஸ்நாக். இது சிக்கன் 65க்கு பதில் இந்த Potato 65 உருவானாலும், இப்போ தனக்கென ஒரு இடத்த பிடிச்சு இருக்க பேமஸ் ஆனா ஸ்ட்ரீட் ஃபுட் இது. பொருத்தமான சமையல் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – இது எல்லாமே சேரும்போது ஒரு உணவு இல்ல, உணர்வாகவே மாறுது.
உருளைக்கிழங்கு என்றால் நம் மனதில் முதலில் வரும் எண்ணம் சாதாரண பொரியல் தான. ஆனால் அதே உருளைக்கிழங்கு, கரெக்டான மசாலா, சுடசுட எண்ணெய், தெறிக்கும் கருவேப்பிலை, மிளகாய் வாசன இதுகூடலாம் கலந்தால் அது உருளைக்கிழங்கு 65 ஆக மாறும் – ஒரு சாதாரண ஃபுட் இல்ல, இது ஒரு ஃபுட் எமோஷன்!
சாதம், சாம்பார், ரசம் இதுமாதிரி எல்லா தமிழ் உணவுகளுக்கு கூட பக்காவா இது பொருத்தமா இருக்கும். அதும் இல்லாம மாலை நேரத்துல சூப்பரான ஸ்நாக். குழந்தைகளுல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் விருப்பமான இந்த உருளைக்கிழங்கு 65, உங்க சமையல் லிஸ்ட்டுல தவறாம சேர்க்க வேண்டிய ரெசிப்பி.
இந்த உணவு எந்தவொரு சைவ உணவுக்கும் கலக்கலான மாற்றாக நம்மகிட்ட இருக்குது. இது இப்போ நெறயா பேயோட ஹார்ட்-பீட் ஆகிடுச்சு. வீட்டில இருக்க எளிய பொருட்களையே வச்சு செய்யக்கூடிய இந்த உணவு ஆல் டைம் பேவரட் டிஸ் இதுதா.
ஹோட்டல, தெரு கடைகளுல, இன்னும் என்ன வீட்டு சமையலுனு – எங்கு பார்த்தாலும் உருளைக்கிழங்கு 65 ஒன்று இடம் பிடிச்சுருக்கும். அதன் சிவப்பு நிறமும், மசாலா வாசனையும் நம்மை நேராக தூண்டிவிடும்!
ஒரு மாலை நேர டீ டைம்ல கூட்டமா நண்பர்களோட சேர்ந்து, சுடசுட உருளைக்கிழங்கு 65 உடன் ஒரு சின்ன உரையாடல் – இதுக்கு நிகர் வேறில்லை.இந்த ரெசிப்பி சுவையையும், மனதையும் ஒருசேர கொண்டு வரது தான் அதில் உள்ள கலை!
உருளைக்கிழங்கு 65 செய்முறைய எப்படி பண்ணலாம்னு இப்போ பாக்க போறோம்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சேவைகள்
2-3 நபர்
தேவையான பொருட்கள்:
- 2 பெரிய சைஸ் - உருளைக்கிழங்கு (400 கிராம்)
- 2 தேக்கரண்டி - அரிசி மாவு
- 2 தேக்கரண்டி - சோள மாவு
- 1 தேக்கரண்டி - மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி - கரம் மசாலா
- உப்பு
- மிளகு
- பொரிப்பதற்கு எண்ணெய்
- மசாலாவிற்கு:
- 2 தேக்கரண்டி - எண்ணெய்
- 3/4 தேக்கரண்டி - கடுகு
- 1 பெரிய சைஸ் - வெங்காயம்
- 1 தேக்கரண்டி - இஞ்சி ( பொடியா நறுக்கினது)
- 1 தேக்கரண்டி - பூண்டு ( பொடியா நறுக்கினது)
- 2 - பச்சை மிளகாய்
- 2 - சிவப்பு மிளகாய்
- 1 - கறிவேப்பிலை
- 1/2 தேக்கரண்டி - சீரகப் பொடி
- 1 தேக்கரண்டி - கரம் மசாலா
- 1 தேக்கரண்டி - மிளகாய் தூள்
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய் (பொரிப்பதற்கும் வதக்குவதற்கும்)
- கடுகு வடிக்க கம்பி அடிப்படை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வடிகட்டி
- நடுத்தர அளவு பாத்திரம் (உருளைக்கிழங்கு வேகவைக்க)
- கலவை செய்ய கிண்ணங்கள்
- ஸ்லாட்டட் ஸ்பூன் (oil-லிருந்து எடுக்க)
- தோல் உருக்க கூரை / கத்தி
- டீ ஸ்ட்ரெயினர் (optional – வதக்கி எடுத்த மசாலா வடிக்க)
செய்முறை :
- உருளைக்கிழங்கு தோல உருச்சு அத சின்ன சின்ன க்யூப் சைசுக்கு வெட்டுங்க.
- ஒரு பத்திரத்துல தண்ணீர சேத்து அதுல உருளைக்கிழங்க போட்டு ஒரு 5 நிமிஷம் கொதிக்க விடுங்க.
- தண்ணிய வடுச்சுட்டு அத ஒரு கிண்ணத்துல மாத்திக்கோங்க
- இப்போ அந்த வேக வச்ச உருளைக்கிழங்குல அரிசி மாவு,சோள மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பும் மிளகும் சேத்துக்கோங்க.
- கொஞ்சமா தண்ணி தெளிச்சு அந்த மசாலாவ பூசுங்க.
- ஒரு கடாயில எண்ணெய் சேத்து சூடாக்கி, அதுல உருளைக்கிழங்க போட்டு எல்லா பக்கமும் நல்லா மொறு மொறுப்பாக வதக்கி, எண்ணெயில் இருந்து வடித்து எடுத்து தனியாக வைக்கவும்.
- அடுத்து ஒரு கடாயில எண்ணெய சூடாக்கி கடுகு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலையும் சிவப்பு மிளகாயும் சேத்து வதக்குங்க
- இப்போ பொடியா நறுக்குன வெங்காயத்த போட்டு நல்லா பொன்னிறமா ஆகுற வரைக்கும் வதக்குங்க.
- வெங்காயம் நல்லா வதக்கி பழுப்பு நிறமா மாறினதும், மசாலா- சீரக பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலாவ சேருங்க.
- கடைசியா வறுத்த உருளைக்கிழங்க சேத்து நல்லா கலக்கிக்கோங்க (தண்ணி சேர்க்க வேண்டாம்)
- அவ்வளவு தான் சுவையான மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு வறுவல் பரிமாற தயாராகிடுச்சு.
பரிமாறும் முறை:
- உருளைக்கிழங்கு 65ஐ சூடாக பரிமாறுவது சிறந்தது.
- மேல் கொத்தமல்லி இலை தூவி garnish செய்யலாம்.
- நாண், சப்பாத்தி, சாதம் – அனைத்திற்கும் பக்கவண்டியாக இது சூப்பராக இருக்கும்.
- ஸ்நாக்ஸா பரிமாறுறீங்கனா, மின்ட் சட்னி அல்லது வெண்ணையுடன் கூடிய தயிர் மேல் சிறிது பூண்டு தூள் தூவியும் பரிமாறலாம்.
- பரிமாறும் முன் சில துளிகள் எலுமிச்சை சாறு சொட்டினால், ருசி மேல் குதிக்கும்.
குறிப்பு:
- உருளைக்கிழங்கை ஓவரா வேக்காதீங்க – மென்மையாகி போயிடும்.
- மாவுடன் கலந்து 10–15 நிமிஷம் வெயிட்டு பண்ணினா, மசாலா மேல ஒட்டும்.
- எண்ணெய் நன்றாக சூடாகியதும் தான் பொரிக்க வேண்டும் – இல்லேனா உருளைக்கிழங்கு எண்ணெய் குடிச்சுரும்.
- மசாலா வதக்கும் போது நீர்க்கடையில் கொஞ்சமா இளஞ்சிவப்பு வெங்காயம் சேர்த்தா மேல் தனி சுவை வரும்.
- spicy version வேண்டும்னா மேலிருந்து சிவப்பு மிளகாய்த்தூள் சிறிது தூவிக்கலாம்.
ஒரு மாலை நேர டீ டைம்ல கூட்டமா நண்பர்களோட சேர்ந்து, சுடசுட உருளைக்கிழங்கு 65 உடன் ஒரு சின்ன உரையாடல் – இதுக்கு நிகர் வேறில்லை.இந்த ரெசிப்பி சுவையையும், மனதையும் ஒருசேர கொண்டு வரது தான் அதில் உள்ள கலை!
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe
-
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல!
-
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து
-
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்!
-
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல்
-
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil
-
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து
-
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!
-
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்!
-
ஆப்கானிஸ்தானின் சுவை: சுவையான ஆப்கானி ஆம்லெட் (ககினா) செய்வது எப்படி
Add a Comment