"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!"
என்னதா வீட்ல மீன் வறுவல் கணவாய் வறுவல் மீன் குழம்பு அப்படின்னு எல்லாமே வெச்சாலும் பீச்ல கிடைக்கிற சில உணவுகளுக்கு நம்ம ரொம்ப அடிமையா இருப்போம். பொதுவாக அசைவம் என்றாலே அதற்கு தனி மவுசு தான்.அங்க இருக்குற மாதிரி டேஸ்ட்ல வீட்ல யாராவது செஞ்சு கொடுக்க மாட்டாங்களா அப்படின்னு ஏங்குவோம் ஆனா இனிமேல் அந்த மாதிரி ஏங்க தேவை இல்லை பீச்சுல கிடைக்கிற அதே மாதிரியான சுவையில ரொம்ப கம்மி பொருட்கள வச்சே நம்மளே வீட்டுல சூப்பரான மீன் வறுவல் கணவாய் வறுவல் எல்லாமே செய்யலாம் அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான கணவாய் தவா ஃப்ரை தான் பார்க்க போறோம் பீச்ல கிடைக்கிற அதே டேஸ்ட்ல நல்லா காரசாரமா புளிப்பா சூப்பரா இருக்கும்.
இதே மாதிரி உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு கொடுத்து பாருங்க கணவாய் மீன் வறுவல் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு ரொம்ப இந்த ரெசிபி டேஸ்டா இருக்கும். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட இந்த ரெசிபிய நீங்க செஞ்சு கொடுத்து அசத்தலாம் வீட்டில் இருந்து கூட இந்த கணவாய் தவா ப்ரை செஞ்சுட்டு பீச்சுக்கு போய் அங்க உக்காந்து இத சாப்பிட்டுக்கிட்டே என்ஜாய் பண்ணலாம். ரசம் சாதம் கூட இந்த கணவாய் மீன் ப்ரை வைச்சு சாப்பிட்டா பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆ இருக்கும்.
லீவ் டேஸ்ல நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் வகையில் பல சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிட நம்ம எல்லாருமே ஆசைப்படுவோம். நீங்கள் இந்த வாரம் மீன் எடுக்கும் போது நீங்க கணவா மீனை எடுங்கள். அந்த கணவா மீனை வச்சு தவா ஃப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த கணவா மீன் தவா ஃப்ரை செய்றது ரொம்ப ஈஸி.அதும் 25 நிமிசத்துல மணமணக்கும் ருசியான கணவா மீனை ஃப்ரை பண்ணிடலாம். முக்கியமா இந்த தவா ஃப்ரை பேச்சுலர்களும் செய்யுற வகையில ஈஸியான செய்முறைய கொண்டது.இந்த கனவா மீன் ஃப்ரை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செஞ்ச்சு கொடுத்தா அவர்கள் ரொம்ப விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில சாப்பிடுவாங்க மதியம் சுடான சோரோட நீங்கள் வைச்சு சாப்பிடும் போது ஒரு தட்டு சோறும் சீக்கிரமாவே காலியாகிடும்.கண்டிப்பா நீங்களும் ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த அட்டகாசமான கணவாய் தவா ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சேவைகள்
5 நபர்
தேவையான பொருட்கள்:
- 1/2 கி கணவா மீன்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
தேவையான சமையல் உபகரணங்கள்
- 1 பவுள்
- 1 தோசை கல்
- 1கரண்டி
செய்முறை
- முதல கணவாய் மீன நல்லா கழுவி சுத்தம் செஞ்சு உங்களுக்கு தேவையான வடிவத்தில நறுக்கி வச்சுக்கோங்க.
- பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், மிளகுத்தூள் தூள் இஞ்சி பூண்டு விழுது பொடிப்பொடியாக நறுக்கிய கருவேப்பிலை எலுமிச்சைச்சாறு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைங்க.
- ஒரு தோசை சட்டியில தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஊற வச்சு இருக்க கணவாய் மீன்கள சேர்த்து நல்லா கிளறி எண்ணெயிலேயே வேக வைச்சு இறக்கினால் சுவையான கணவாய் தவா ப்ரை தயார்.
பரிமாறும் முறை
- கமகமக்கும் ரசம் சாதம் மேல ஒரு துண்டு கணவா மீன் வச்சு பரிமாறுங்க – ஒரு பறக்க சோறும் இல்லாம தட்டையே தூக்கி சாப்பிடுவாங்க!
- வெறும் சாதம் + வதக்கிய கறிவேப்பிலை ரசம்-ல சேர்த்து கணவாய் தவா ஃப்ரை கொடுத்தா அது ஒரு கோல்ட் காம்பினேஷன்!
- சூடான இடியாப்பத்தோடு இதை பரிமாறினா ஃபைன் டைனிங் லெவல்!
- சைட்ல வெங்காய செலட் + எலுமிச்சை சாறு கொஞ்சம் , ருசிக்கே ஒரு பண்ணான சவால்!
- சண்டே லஞ்ச் ப்லேட்டுல – புளிசாதம், சாம்பார், ஒரு வடை, கூட்டு – கூடவே ஒரு crispy கணவாய் தவா ஃப்ரை... இப்போவே வாயில தண்ணி வரலா?
குறிப்பு
- கணவா மீனை அடிக்கடி கிளறாம வேகவைக்கும் போது அது மென்மையாக இருக்கும்.
- மசாலா ஊற வைக்கும் நேரத்தை அதிகப்படுத்தினா ருசி இன்னும் ரொம்ப நல்லா வரும்.
- டேஸ்ட்ல வித்தியாசம் பாக்கணும்னா கொஞ்சம் பெருங்காயம், சீரகம் தூள் சேர்க்கலாம்.
- கணவா மீனை தவா-ல ஃப்ரை செய்யும் போது நெய்+எண்ணெய் கலந்தா இன்னும் நல்ல வாசனை வரும்.
- டயட் பார்ப்பவங்க, எண்ணெய் கம்மி பண்ணி ஏர்ஃப்ரையர்-ல கூட இதை செய்யலாம்.
பீச்சுல சாப்பிடுற மாதிரி அசத்தலான சுவையில கணவாய் தவா ஃப்ரை-யை வீட்டிலேயே ரெடி பண்ண முடியுன்னு இப்போ தெரியுது இல்லயா? குறைந்த எண்ணெய்ல, சுலபமா 25 நிமிஷத்துல ரெடி ஆகும் இந்த ரெசிபியை ஒரு தடவ செஞ்சு பாருங்க. சாப்பிட்டவுடனே “வேற லெவல்!”ன்னு சொல்லாம இருக்க முடியாது. மீன் பிரியர்களுக்கு மட்டும் இல்லாம, மீன் பிடிக்காதவங்களுக்கு கூட இது ரொம்ப பிடிக்கும்.
Search.......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment