செட்டிநாடு நண்டு தொக்கு(Chettinad nandu thokku)
இந்த செட்டிநாடு நண்டு தொக்கு(Chettinad nandu thokku) செஞ்சு சுட சுட சாதத்தோட சேத்து சாப்பிட்டா அவ்வளவு அற்புதமான டேஸ்டுல வரும். இத சாதத்தோட போட்டு பெரட்டியும் சாப்பிடலாம். மழை காலத்துலயும் குளிர்காலத்துலயும் நம்ம ஒடம்புக்கு இதமா இருக்கும். எந்த வகையான நண்டா இருந்தாலும் இந்த செய்முறையுல மசாலா செஞ்சா சுவையா இருக்கும்.
இதுலயே எல்லாரும் விரும்பி சாப்பிடுறது நண்டு ரசம், நண்டு கிரேவி,நண்டு எல்லா காலத்துலயும் கிடைக்கும். நெறயா பேருக்கு நண்டு எப்பிடி சமைக்குறதுனு தெரியாது, ஆனா அந்த கவலையே வேண்டாம்.
இந்த செய்முறையில செஞ்சு பாருங்க. ரொம்ப சுலபமா செய்ய முடியும். சுவை நாக்குலயே ஒட்டிக்கிரும்.அடி கடி செய்ய தோணும். இந்த வாரம் கடைசில நீங்க இந்த நண்டு தொக்கு ரெசிபிய கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தயாரிப்பு நேரம்
45 நிமிடம்
சேவைகள்
3-4 நபர்
தேவையான பொருட்கள்:
- 1/2 கிலோ - சுத்தம் செஞ்ச கடல் நண்டு
- 2 பெரிய - வெங்காயம்
- 2 - தக்காளி
- 1/2 ஸ்பூன் - மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் - மல்லி தூள்
- 2 - பச்சை மிளகாய்
- 1 டேபிள்ஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- 1 குளிக்கரண்டி - கடலை எண்ணெய்
- 1 ஸ்பூன் - மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் - மிளகு தூள்
- 2 கீற்று - கருவேப்பிலை
தேவையான சமையல் உபகரணங்கள்
- பெரிய கடாய்
- கரண்டி
- தட்டு
- நண்டு சுத்தம் செய்ய பெரிய பாத்திரம்
- மூடுவதற்கான தட்டு
செய்முறை :
- ஒரு கடாய அடுப்புல வச்சு அது சூடானதும் எண்ணெய் ஊத்தி காஞ்சதும் அதுல இஞ்சி பூண்டு பேஸ்டும் பச்சை மிளகாய ஒடச்சு போட்டுக்கோங்க.
- அதோட பச்ச வாசனையலாம் போனதும் வெட்டி வச்சு இருக்க வெங்காயத்த சேத்து கொஞ்சமா உப்பு சேத்து வதக்குங்க.
- வெங்காயம் பொன்னிரமா ஆனதும் தக்காளி சேத்து வதக்குங்க.
- வெங்காயமும் தக்காளியும் நல்லா குழஞ்சதும் மேல குடுத்து இருக்க மசாலா தூள் எல்லாத்தையும் ஒண்ணுக்கு அடுத்து ஒன்னு சேர்த்து போட்டு நல்லா வதக்குங்க.
- இப்போ உங்க டேஸ்ட்டுக்கு ஏத்தமாதிரி உப்பு சேத்து நல்லா கிண்டி விட்டு அடுத்து அதுல சுத்தம் செஞ்சு வச்சு இருக்க நண்ட சேத்து கிண்டி விட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணி ஊத்தி மூடி வச்சு வேக விடுங்க.
- நண்டுல இருந்து தண்ணி வத்துனதுக்கு அப்பறமா மிளகு தூள் எடுத்து அதுக்கு மேல அப்டியே மழை சாரல் போல தூவி விடுங்க.
- அத அப்டியே ஒரு பெறட்டும் பெரட்டி ஒரு அரை மணி நேரம் மூடி போட்டு வச்சுட்டு அடுத்து பரிமாறலாம். இப்போ அருமையான சூப்பரான நண்டு தொக்கு தயார்.
பரிமாறும் முறை:
- சுட சுட சாதத்தோடு பரிமாறலாம்.
- சாதத்துல போட்டு பெரட்டி சாப்பிட்டா நண்டு சாறு நிறைய ஒட்டும்.
- சப்பாத்தி, இடியப்பம், இட்லி கூட நண்டு தொக்கு சூப்பராக காம்பினேஷன் ஆகும்.
- கொஞ்ச வெந்தயக் குழம்பு சைடாக இருந்தா இன்னும் சிறந்த சுவை கிடைக்கும்.
குறிப்பு:
- நண்டு நன்றாக சுத்தம் செய்யணும், இல்லனா வாசனை வரும்.
- மசாலா தூள்களை மிதமான அச்சினில் வதக்கணும், கடைசி சுவைக்கு முக்கியம்.
- மிளகு தூள் அதிகமா போட்டா சிறப்பான காரத் தனி சுவை வரும்.
- நண்டு வேகும்போது தண்ணி நிறைய விட வேண்டாம்; அதுக்கு தன்னோட சாறு வரும்.
- கடைசி ஸ்டேஜ்ல பெரட்டி வச்சா தான் நல்லா மசியாத நண்டு தொக்கு கிடைக்கும்.
செட்டிநாட்டு ஸ்டைல் நண்டு தொக்கு கடல் வாசனையோடு கலந்த ஒரு அற்புதமான உணவுப்பொருள். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் சாப்பிட இது மிகவும் சிறந்த தேர்வு. இந்த எளிமையான செய்முறையால் வீட்லயே கடை தரமான நண்டு தொக்கு தயார் பண்ணலாம். ஒருமுறை செய்துபாருங்க, உங்க வீட்டுல இருக்கு எல்லாரும் நிச்சயம் விரும்பி சாப்பிடுவாங்க!
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல!
-
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து
-
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல்
-
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து
-
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்!
-
ஆப்கானிஸ்தானின் சுவை: சுவையான ஆப்கானி ஆம்லெட் (ககினா) செய்வது எப்படி
-
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!
-
ஆட்டுக்கால் பாயா ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா செய்முறை
-
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்!
-
Chicken Samosa: A Delicious Snack Recipe
Add a Comment