அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க.
பன்னீர் பட்டர் மசாலா — வட இந்தியாவில் தொடங்கிய இந்த பேமஸ் டிஷ் இப்போ தென்னிந்தியாவிலும் எல்லாரோட மனசை கவர்ந்திருக்கிறது. முதலில் ஹோட்டல்களில் மட்டுமே சாப்பிடக் கிடைத்த இந்த ருசியான கிரேவியை, இப்போ ஒவ்வொரு வீட்டிலும் ஈஸியா சமைக்குறாங்க.
சப்பாத்தி, நான், இட்லி, தோசை — எந்த டிஷ்க்கும் பொருந்தும் இந்த பன்னீர் பட்டர் மசாலா ஒரு அட்டகாசமான சைடிஷ். எப்போவும் சாம்பார், சட்னி மாதிரி டிஷ் சாப்பிடுறதுக்கு பதிலா, இத மாதிரி கொஞ்சம் வித்தியாசமான ருசியில செஞ்சு பாத்தா குடும்பம் முழுக்க ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க.
பன்னீரும் பட்டரும் உடம்புக்கு நன்மை தரும் பொருட்கள். அதனால இத சாப்பிடுறதுல ருசியும் ஹெல்த்யும் கூட இருக்குது. ஆனா இன்னும் நிறைய பேருக்கு வீட்டில செய்றது ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட்டுல வரலனு தோணும். அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் — இன்று நாம ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று படிப்படியாக பார்க்கலாம்.
வாங்க, தொடங்கலாமா! 😋
தயாரிப்பு நேரம்
35 நிமிடம்
சேவைகள்
2–3 நபர்களுக்கு போதுமானது
தேவையான பொருட்கள்:
- முக்கிய பொருட்கள்:
- பன்னீர் – 200 கிராம்
- பட்டர் – 200 கிராம்
- உப்பு – 20 கிராம்
- பிரெஷ் கிரீம் – 50 கிராம்
- சக்கரை – 20 கிராம்
- மசாலா பேஸ்ட் தயாரிக்க வேண்டிய பொருட்கள்:
- எண்ணெய் – 50 கிராம்
- பட்டை – 1 கிராம்
- கிராம்பு – 1 கிராம்
- ஏலக்காய் – 1 கிராம்
- வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி – 100 கிராம்
- பச்சை மிளகாய் – 10 கிராம்
- காஞ்ச மிளகாய் – 10 கிராம்
- முந்திரி – 50 கிராம்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 10 கிராம்
- 🌶️ மசாலா தூள் மற்றும் பிற பொருட்கள்:
- இஞ்சி விழுது – 50 கிராம்
- பூண்டு விழுது – 50 கிராம்
- சீரகம் – 10 கிராம்
- சீரக தூள் – 10 கிராம்
- மல்லி தூள் – 20 கிராம்
- கரம் மசாலா – 10 கிராம்
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய்
- மிக்ஸி
- ஸ்பூன் / ஸ்பேச்சுலா
- கத்தி & வெட்டும் பலகை
- அளவுக்கோப்பை
செய்முறை
- மசாலா பேஸ்ட் தயாரிப்பு:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காஞ்ச மிளகாய், முந்திரி சேர்த்து வதக்கவும்.
- அது குளிர்ந்ததும் அரைத்து மசாலா பேஸ்ட் தயாரிக்கவும்.
- கிரேவி தயாரிப்பு:
- ஒரு கடாயில் பட்டர் உருக வைத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- அதில் அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இப்போது காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், உப்பு, சக்கரை, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5–10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- பன்னீர் சேர்த்தல்:
- பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து 2–3 நிமிடங்கள் வேகவிடவும்.
- இறுதி ஸ்டேஜ்:
- அடுப்பை அணைக்கும் முன் பிரெஷ் கிரீம், கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மேலே சிறிது பட்டர் விட்டு பரிமாறவும்.
பரிமாறும் முறை
- சப்பாத்தி, நான், புலாவ், தோசை — எதோடச் சேர்ந்தாலும் சூப்பரா இருக்கும்! 😋
- அலங்காரம்: புதிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கலாம்
குறிப்பு
- கிரேவிக்காக காஷ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்தினால் நிறம் அழகாக வரும், காரம் குறையும்.
- பன்னீரை சிறிது வெந்நீரில் நனைத்து சேர்த்தால் மென்மையாக இருக்கும்.
- முந்திரிக்கு பதிலாக சிறிது பாதாம் பயன்படுத்தலாம்.
ஹோட்டல் ஸ்டைல் சுவை வீட்டிலேயே கிடைக்கும்.
பன்னீரின் மென்மையும் பட்டரின் நெய்ப்புணர்வும் சேர்ந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த ருசியான டிஷ் இது!
- மசாலா கலவை சேர்த்தல்:
Search.......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment