மென்மையான ஃபட்ஜி பிரவுனி | வீட்டில் சுலபமாக செய்யும் சாக்லேட் கேக் ரெசிபி
ஃபட்ஜி பிரவுனிஸ்.
பண்டிகை காலம் என்றாலே இனிப்பு நினைவுக்கு வரும், அதில் கேக் ஒரு முக்கியமான இடம் பிடித்திருக்கும். கேக்கில் பலவகைகள் இருந்தாலும், பிரவுனிக்கு தனி ரசிகர்கள் வட்டமே இருக்கிறது. மென்மையானதும், சுவையிலும் வேற லெவல் என பலரும் பெருமையாகப் பேசும் வகைதான் Fudgy Brownie!
இந்த ப்ரவுனி வகை, நாக்கில் வைத்தவுடனே உருகும் மிருதுவான மெய்க்கிளறும் உருமாறிய சாக்லேட் ருசியால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மயக்கும். ஒருமுறை சுவைத்தால் மறுபடியும் மறுபடியும் சாப்பிடத்தோன்றும் இவற்றை, ஆரம்ப காலங்களில் சற்று விலை உயர்ந்த கெடைகளில் மட்டுமே கண்டிருப்போம். ஆனால் இன்று, இந்த சுவையை வீட்டிலேயே எளிமையாகவும், விருப்பமான அளவில் செய்து ரசிக்கலாம்.
அதனால், இனி கடைகளில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய இந்த மென்மையான Fudgy Brownie ரெசிபியை இங்கே பார்க்கலாம்!
தயாரிப்பு நேரம்
45–50 நிமிடங்களில் தயார்
சேவைகள்
4-5 நபர்
தேவையான பொருட்கள்:
- வெண்ணெய் – 140 கிராம்
- சாக்லேட் துண்டுகள் – 120 கிராம் (டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட் கலந்து எடுத்தோம்)
- முட்டை – 2
- சர்க்கரை – 3/4 கப்
- மைதா மாவு – 1/2 கப்
- கோகோ பவுடர் – 1/3 கப்
- உப்பு – 1/2 டீஸ்பூன்
- வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
தேவையான சமையல் உபகரணங்கள்
- பவுல் (Bowl) – கலவைக்காக 2 பெரிய பவுல்கள்
- சல்லடை – மாவு மற்றும் கோகோ பவுடரை சலிக்க
- ஹேண்ட் மிக்சர் அல்லது வீஸ்க் (Hand mixer / Whisk) – முட்டை மற்றும் சர்க்கரை நன்கு கிளற
- ஸ்பேச்சுலா (Spatula) – மெதுவாக கலக்க
- ஓவன் (Oven) – பேக் செய்ய
- பேக்கிங் டின் (Baking tin) – சதுர வடிவ அல்லது உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப
- பேக்கிங் பேப்பர் (Baking paper) அல்லது வெண்ணெய் / மைதா – டின் ஒட்டாமல் இருக்க பூச
- டூத் பிக் – வெந்துடுச்சா என சோதனை செய்ய
- மைக்ரோவேவ் பாத்திரம் / கடாய் – வெண்ணெய் மற்றும் சாக்லேட் உருக்க
- ஸ்டவ் (விருப்பப்படி) – சாக்லேட் உருக்க மைக்ரோவேவ் இல்லையெனில்
செய்முறை
- வெண்ணெய் மற்றும் சாக்லேட்டை உருக்கவும் – ஒரு பவுலில் வெண்ணெயும் சாக்லேட் துண்டுகளும் சேர்த்து, மைக்ரோவேவ் அல்லது அடுப்பில் வைத்து மென்மையாக உருக்கவும்.
- முட்டையும் சர்க்கரையும் அடிக்கவும் – வேறு பவுலில் முட்டையும் சர்க்கரையும் சேர்த்து, ஹேண்ட் மிக்சர் கொண்டு நன்கு நுரை வரும்வரை அடிக்கவும்.
- சாக்லேட் கலவையை சேர்க்கவும் – அதில் உருக்கிய சாக்லேட்-வெண்ணெய் கலவையையும், வெண்ணிலா எசன்ஸையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- உறுப்பு பொருட்களை சலிக்கவும் – மைதா, கோகோ பவுடர், உப்பை சலித்து அதில் சேர்க்கவும்.
- மெதுவாக கிளறவும் – ஸ்பேச்சுலா கொண்டு மெதுவாக கலக்கவும், அதிகமாக கலக்க வேண்டாம்.
- பேக் செய்யவும் – கலவையை ஸ்கொயர் பேக்கிங் டினில் ஊற்றி, 170°C-ல் 30–35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- சோதனை செய்யவும் – நடுவில் டூத் பிக் குத்தி பார்த்து சுத்தமாக வந்தால், பிரவுனி தயாராகிவிட்டது.
பரிமாறும் முறை
- சூடாகவும் பரிமாறலாம்.
- வெறும் பிரவுனியாகவும், அல்லது ஐஸ்கிரீம், சாக்லேட் சாஸ் உடன் கூட பரிமாறலாம்.
- சிற்றுண்டி, டீடைம் ஸ்நாக், அல்லது டெசர்ட்டாக பரிமாறலாம்.
குறிப்பு
- வெண்ணெய் மற்றும் சாக்லேட் உருக்கும்போது தாங்கள் எரியாமல் கவனமாக இருக்க வேண்டும்.
- மேலே நட்ஸ் சாக்லேட் சிப்ஸ்கள் அல்லது வால்நட் துண்டுகள் சேர்க்கலாம்.
- அடிக்கடி ஓவனை திறக்க வேண்டாம்.
- அதிகமாக கிளறினால் மென்மை குறையும்.
- டூத் பிக் முழுமையாக சுத்தமாக வந்தால், ஓவர் பேக் ஆகிவிட்டதாக பொருள். சற்று ஈரமாக இருந்தால் தான் சரியான ஃபட்ஜி பிரவுனிஸ்.
இப்போது கடையில் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் உள்ள சில எளிய பொருட்கள் கொண்டு, சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த Fudgy Brownie, உங்கள் வீட்டுக்காரர்களையும், சிறுவர் பெரியவர்களையும் உற்சாகப்படுத்தும்! ஒரு முறையாவது செய்து பாருங்கள் – உங்கள் கைருசிக்கு பாராட்டு மட்டுமல்ல, மனநிறைவும் கிடைக்கும்!
Search.......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment