பீட்ரூட் சட்னி ரெசிபி | சுவையான & ஆரோக்கியமான பக்கா வியஞ்சனம்
பீட்ரூட் சட்னி
“பீட்ரூட் சாப்பிட்டா ஹீமோகுளோபின் அதிகரிக்கும்” அப்படின்னு நம்ம எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். உடம்புல ஹீமோகுளோபின் குறைவாக இருந்தா, மாத்திரை வாங்கி சாப்பிடணும் அப்படின்னு நம்ம நினைப்போம். ஆனா உண்மையில, அதுக்கெல்லாம் முன்னாலேயே தடுப்பதற்கான வழி — நம்ம உணவுல பீட்ரூட்டை அடிக்கடி சேர்த்துக்கொள்வது தான்.
பீட்ரூட் ஒரு சத்துமிகுந்த காய்கறி. ஹீமோகுளோபினை அதிகரிக்க மட்டும் இல்லாமல், ரத்த சுத்திகரிப்பு, ஜீரண சுகம், தோலின் பிரச்சினைகளுக்கு கூட உதவிகரமாக இருக்கும். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம், பீட்ரூட் பொரியல், பீட்ரூட் கிச்சடி, பீட்ரூட் கூட்டு, பீட்ரூட் அல்வா என்று பலவகையில் நம்ம செய்கிறோம். ஆனால், இந்த பீட்ரூட் சட்னியை நம்ம நிறைய பேர் இன்னும் முயற்சி செய்திருக்க மாட்டோம்!
இந்த சட்னி, செய்முறையுடன் தயாரிக்கப்படும் ஒரு தனிச்சிறப்பான சைடு டிஷ். சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த பீட்ரூட் சட்னியை ஒரு தடவை செஞ்சு பாத்தீங்கன்னா — இட்லி, தோசை, சாதம், ரொட்டி எதற்குமே ஒரு சூப்பரான காம்பினேஷ்னா மாறிடும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. கொஞ்சம் வித்தியாசமா, சத்தான உணவாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
இது ஒரு ஈஸியான ஹெல்த்தி சட்னி — செய்து பாருங்க, மறக்கவே முடியாத சுவை உங்களுக்கு காத்திருக்கிறது! வாங்க, இப்போ இந்த ஆரோக்கியமான பீட்ரூட் சட்னியை எப்படி செய்வது என படி படியாக பார்க்கலாம்.
தயாரிப்பு நேரம்
30-40 நிமிடங்கள்
சேவைகள்
4-6 நபர்
தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் - 1 கப் ( துருவியது)
- தேங்காய் - 1/2 கப்
- எண்ணெய் - 1 1/2 tbs
- உளுந்தம் பருப்பு - 1 1/2 tbs
- கடலை பருப்பு - 2 tbs
- சிவப்பு மிளகாய் - 3
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- இஞ்சி - 1/2 துண்டு
- புளி - சின்ன நெல்லிக்காய் சைஸ்
- கறிவேப்பிலை - ரெண்டு கீற்று
- உப்பு
- எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்
- கடுகு - 1 tbs
- தாளிக்க:
- எண்ணெய் – ½ டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- பெருங்காயம் – சிறிது
- கறிவேப்பிலை – சிறிது
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய் (தாளிக்கவும், வதக்கவும்)
- ஸ்பாட்டுலா / கரண்டி (கிளற)
- மிக்ஸி ஜார் (அரைக்க)
- தாளிக்க சிறிய வாணலி
- பரிமாறும் கிண்ணம் அல்லது பவுல்
- துருவி (பீட்ரூட் துருக்க)
செய்முறை :
- ஒரு கடாயில் எண்ணெய சூடாக்கி, கடலை பருப்பு, உளுந்த பருப்பு, பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். பருப்பு பொன்னிரமா மாறியதும் புளி, இஞ்சி சேர்த்து சில நொடிகள் வதக்கி, அடுப்பை அணைக்கவும்.
- வாணலியில் இருந்து இறக்கி ஆற விடவும். அதே வாணலியில் துருவிய பீட்ரூட் கறிவேப்பிலை சேத்து மிதமான தீயில், பீட்ரூட்டின் பச்சைத்தன்மை போகும் வரை அவ்வப்போது கிளறி விட்டுட்டே இருங்க.
- நல்லா வதங்கியது அதை ஒரு தட்டிற்கு மாத்தி சூடு ஆற விடுங்க.
- சூடு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாத்தி நல்லா கொரகொரப்பாக சட்னி பதத்துக்கு அரச்சு எடுத்துக்கோங்க. அதை ஒரு கிண்ணதுக்கு மாத்தி தனியாக வைத்து கொள்ளவும்.
- இப்போது தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு கறிவேப்பிலை பெருங்காயம் எல்லாம் போட்டு சட்னியின் மேல் போடவும்.
பரிமாறும் முறை:
- இந்த பீட்ரூட் சட்னி சூடான இட்லி, தோசை, பணியாரம், வெண் பொங்கல், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது.
- ரொட்டி, சப்பாத்தி, புல்கா போன்றவற்றுடன் சைடு டிஷாகவும் பரிமாறலாம்.
- மாலை நேர ஸ்நாக்ஸ் சதுமடையிலும் இந்த சட்னி வித்தியாசமான சுவையை தரும்.
- சிறு பரிமாறும் கிண்ணத்தில் சிறிது எண்ணெய் தோய்த்தபின் பரிமாறினால் நன்கு மென்மையாக இருக்கும்.
குறிப்பு:
- பீட்ரூட் முழுவதும் வதங்கும் வரை நன்கு கிளற வேண்டும் – இல்லையென்றால் சட்னியில் பச்சை வாசனை இருக்கும்.
- தேங்காய் சேர்க்கும் போது, அது நன்றாக (fresh) இருக்க வேண்டும் – இது சட்னிக்கு சுவையும் வாசனையும் கூட்டும்.
- உப்பு மற்றும் காரத்தைக் உங்கள் ருசிக்கேற்ப சரிசெய்யலாம்.
- சட்னியை கொரகொரப்பாக அரைத்தால் சிறந்த தோற்றமும் சுவையும் கிடைக்கும்.
- அதிக நாள் வைக்க வேண்டுமெனில் சிறிது எண்ணெய் மேலே ஊற்றி, கண்ணாடி குப்பியில் குளிர வைத்தால் 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
- புளி அதிகமா போனால் சட்னி புளிப்பாக ஆகும் – அதனால் அளவை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவும்.
பார்ப்பதற்கு வித்தியாசமா, சாப்பிட சுவையாகவும், உடலுக்கு நன்மையுடன் நிறைந்த சத்துக்கள் கொண்ட இந்த பீட்ரூட் சட்னி – உங்கள் தினசரி உணவில் மாற்றுத்திறனான சைடு டிஷாக மாறக்கூடியது. பீட்ரூட்டின் இயற்கையான இனிப்பு மற்றும் பருப்புகளின் வாசனை சேர்ந்து, இது ஒரு பரிபூரண சுவையூட்டும் சட்னியாக மாறுகிறது.
இட்லி, தோசை, சாதம், ரொட்டி என எந்த உணவோடும் கம்பியினாக பரிமாறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சட்னியை வாரத்துக்கு ஒருமுறையாவது செய்து பாருங்கள். சுவை மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளும் உங்களுக்கே!
“நாம சாப்பிடுறது மருந்தா இருக்கணும்!” அப்படின்னு சொல்வாங்க இல்ல, அந்த மாதிரியான உணவுதான் இந்த பீட்ரூட் சட்னி!
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment