ரசம் பொடி செய்வது எப்படி
ரசம் என்பது நம் தமிழ் வீடுகளில் நாள்தோறும் செய்யப்படும் ஒரு ஹெல்த்தியான உணவாக இருக்கிறது. அதன் தனித்துவமான சுவைக்கும் வாசனைக்கும் முக்கிய காரணம் — “ரசம் பொடி”. நம்ம வீட்டுப் பாணியில், மிளகு, சீரகம், துவரம் பருப்பு, கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை என எல்லாமே சேர்ந்து வாசனை கமழும், நாக்க சுண்டி இழுக்கும் ரசம் பொடி.
நம்ம வீட்டுல அசைவம் செஞ்சாலும் சைவம் செஞ்சாலும் அதுகூடவே ரசம் செஞ்சு வச்சுருவாங்க ஏன் அப்டினா நம்மக்கு சாப்பாடு வெஜ்ஜா இருந்தாலும் நான்வெஜ்ஜா இருந்தாலும் சரி கடைசியா ரசத்த ஊத்தி கொளப்பி அடுச்சதா நம்ம சாப்பிட்டதே முழுமையாகும். இந்த ரசத்த ஒரு சில பேரு வேற வேற விதமா வைப்பாங்க ஒரு சிலர் ரசத்துக்கு தேவையானத்தலாம் போட்டு மிக்ஸி லா அரைச்சு வைப்பாங்க இன்னும் சிலர் ரச பொடிய கடையில வாங்க யூஸ் பண்ணிவாங்க. ஆனா இந்த கடையில வாங்குற பொடிக்கல விட நம்மல்லே அத ஃபிரெஷ்ஷா அரச்ச ரச பொடில ரசம் வச்சா நம்ம வைக்குற ரசத்தோட வாசனை பக்கத்து தெரு வரைக்கும் போகும்.
இப்படி வச்சதா நம்ம ரசதோட டேஸ்ட் தனி தனியா தெரியும். ஆனா இப்போ இருக்குற வேகமான உலகத்துல சீக்கரம் முடிக்குறது ரொம்பவே நல்லதா இருக்கும்னு தோணுது எல்லாருக்கும். காலைல வேகமா ஆபீஸ் போறவங்கள் எல்லாரும் இதத்தான் எதிர் பாக்குறாங்கனு கூட சொல்லலாம். காலைல வேலைக்கு போறவங்களுக்கு பிரெஷ்ஷா செஞ்சு ரசம் வைக்கிறது கஷ்டம். அவங்களுக்காகவே சீக்கிரம் வைக்குற மாதிரி முன்கூடியே நம்ம செஞ்சு வைக்க கூடிய இந்த சூப்பரான ரச பொடி எப்படி செய்யலாம்னு பாக்க போறோம்.
அதே மாதிரி இந்த ரச பொடியா நீ செஞ்சு வச்சுட்டீங்கன்னா போதும் காலைல உங்களுக்கு சீக்கிரம் ரசத்த சட்டுனு முடுச்சுடலாம். கடையில வாங்குற ரச பொடி மாதிரிலாம் நம்ம வீட்டுல செயுற மாதிரி வராது. நம்ம நேரத்த ரொம்ப மிச்ச படுத்துற இந்த ரச பொடியா வீட்டுல இருக்குறவங்களும் செஞ்சு வச்சுக்கலாம். இது நீங்க ரொம்ப நேரம் கிட்சன்லயே இருக்குறத கம்மி பண்ணும். இதோட சுவையும் மணமும் அப்படியே இருக்கும். இந்த யூஸ்புல்லானா ரச பொடியா எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.
தயாரிப்பு நேரம்
30-40 நிமிடங்கள்
சேவைகள்
4-6 நபர்
தேவையான பொருட்கள்:
- மல்லி - 1/4 கப்
- சீரகம் - 2 மேசைக்கரண்டி
- மிளகு - 2 மேசைக்கரண்டி
- தனி மிளகாய் வத்தல் - 5-7 காரத்துக்கு ஏற்ப
- துவரம் பருப்பு - 1/4 கப்
- கருவேப்பிலை - 2 கைப்பிடி (காயவைத்தது)
- மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி
- பெருங்காயம் - 1/2 மேசைக்கரண்டி
தேவையான சமையல் உபகரணங்கள்
- 1 வாடையில்லாத உருளை/கடாய்
- 1 கரண்டி கிளற
- 1 மிக்ஸி அல்லது கிரைண்டர்
- காகிதம் அல்லது தட்டு (குளிர வைக்க)
- ஏர்டைட்டான டப்பா (பொடி சேமிக்க)
செய்முறை :
- கடாயை சூடாக்கவும் – எண்ணெய் தேவையில்லை.
- தனித்தனியாக வறுக்கவும்:
- முதலில் துவரம் பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- பின்பு மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை — ஒவ்வொன்றையும் வாசனை வரும் வரை வறுக்கவும்.
- வத்தல், கருவேப்பிலை சேர்த்து கிரிஸ்பி ஆகும் வரை வறுக்கவும்.
- எல்லாவற்றையும் தனியாக ஒரு தட்டில் பரப்பி சூடு ஆற விடவும்.
- பொடி செய்வது எப்படி
- அடுப்பை ஆஃப் பண்ணி, பொருட்கள் குளிர்ந்ததும், மிக்ஸியில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து, ஒரு மென்மையான அல்லது லைட்டா கொரகொரப்பான பவுடராக அரைக்கவும்.
- பவுடர் தயாரானதும், காகிதம் மேல் பரப்பி, சிறிது நேரம் வைத்த பிறகு ஏர்டைட்டான டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
- அடுத்த தடவையிலிருந்து கடையில் வாங்குற ரசம் பொடி வேண்டாம் — வீட்டிலேயே செஞ்சு பாருங்க!
பரிமாறும் முறை:
- 1.5 tsp–2 tsp ரசம் பொடி ஒரு முறை ரசத்திற்கு போதுமானது.
- புளி தண்ணீர், தக்காளி சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர் ரசம் பொடி சேர்த்து கொதிக்கவைத்து, கொத்தமல்லி, மிளகு தாளித்து பரிமாறலாம்.
- மிளகு ரசம், பருப்பு ரசம், தக்காளி ரசம் — எந்த வகைக்கும் பயன்படுத்தலாம்.
குறிப்பு/டிப்ஸ்:
- கிரைண்ட் பண்ணும் போது மிக்ஸி சூடாக வேண்டாம். வாசனை கெட்டுப்போகும்.
- வறுக்கும் போது மெதுவாக தீயில் வறுக்கவேண்டும்.
- கருவேப்பிலை சாப்பாட்டுக்கு நல்ல நறுமணமும், ஆரோக்கியமும் தரும்.
- தேவையெனில் கொஞ்சம் தங்கத் திப்பிலியும் சேர்த்துக்கலாம் (அது குளிர் நிவாரணம் தரும்).
ரச பொடியை பாதுகாப்பது :
- குளிர்ந்ததும், டைட்டனா டப்பாவில் போட்டு வைத்து, அறை வெப்பத்தில் 2–3 மாதம் வரை பயன்படுத்தலாம்.
- தட்டி கட்டி இல்லாமல் வைக்க வேண்டும்.
- ஒவ்வொரு முறையும் உலர்ந்த கரண்டியால் எடுக்க வேண்டும்.
சாதாரணமான நம்ம வீட்டு சமையலை ருசி-வாசனை மிக்கதாக மாற்றும் மிக முக்கியமானது தான் இந்த ரசம் பொடி. கடையில் வாங்கும் பொடியைவிட, வீட்டில் செய்வது நம் சுகாதாரத்துக்கும், சுவைக்கும் நல்லது. சுவையான, வாசனை மிக்க ரசத்துக்கான ரகசியம் இதுவே!
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment