Manga Chutney | மாங்கா மிளகாய் சட்னி செய்வது எப்படி?சூப்பரான மாங்காய் சட்னி செய்முறை
மாங்கா சட்னி
கோடை காலத்துல மாங்கா நெறய கிடைக்கும். இந்த மாங்காய வச்சு நெறய ரெசிபி பண்ணலாம். இப்போ நம்ம மாங்காய வச்சு மாங்காய் சட்னி எப்படி பண்ணலாம்னு பாக்கலாம். நம்ம பெரும்பாலும் காலைலயும் நைட்டுக்கும் இட்லி, சப்பாத்தி, உப்புமா,தோசை வழக்கமான டிபன் ஆகிகிடுச்சு. இதுக்குலாம் நம்ம பெரும்பாலும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி தா ரெடி பண்ணுவோம். இதுலாம் சாப்பாடு சாப்பாடு சழுச்சுருக்கும் அதுக்கு பதில் புதுசா ஒரு சட்னி ட்ரை பண்ணுனா எப்படி இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தா
மாங்காய் சீசன் ஸ்பெஷல் – சுவைமிக்க மாங்கா சட்னி!
இப்போது மாங்காய் பருவம் என்பதால், பசுமையான மாங்காய்கள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. பொதுவாக மாங்காய் கொண்டு நாம் பலவகை உணவுகள் செய்கிறோம் — மாங்காய் சாதம், மாங்காய் சாம்பார், பச்சடி, ஊறுகாய் என பட்டியலே பெரியது. ஆனால், இன்று நாம் பார்க்கப்போகும் இந்த மாங்கா சட்னி, வழக்கமான சட்னிகளுக்கு ஒரு இனிமையான மாற்றாக இருக்கும்.
இந்த சட்னி, காரமும் புளிப்பும் கலந்த ஒரு தனிச்சுவை கொண்டது. வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த மாங்கா சட்னி, கர்ப்பிணி
பெண்களுக்கு கூட உகந்தது. அதில் உள்ள புளிப்பு சுவை, வயிற்றை கலக்காமல், வாந்தி போன்ற உணர்வுகளை குறைக்க உதவுகிறது.
மாங்காயில் நம்மை தொற்று நோய்களிலிருந்து காக்கும் நன்மைகள் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை (immunity) அதிகரிக்க உதவுகிறது. எனவே, இப்போது பருவத்தில் கிடைக்கும் மாங்காய்களை பயன்படுத்தி இந்த சட்னியை வீட்டிலேயே செய்து பாருங்கள்!
சாதம், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இது ஒரு அட்டகாசமான சுவை அனுபவமாக மாறும்.
பலவிதமான சட்னிகளில் இது ஒரு standout recipe. வாருங்கள், இந்த பதிவின் மூலம் மாங்கா சட்னி எப்படி செய்வது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்!
தயாரிப்பு நேரம்
20-25 நிமிடங்கள்
சேவைகள்
3-4 நபர்
தேவையான பொருட்கள்:
- மாங்காய் - 1 (நடுத்தர அளவு)
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 3
- வெங்காயம் (நறுக்கியது) - 1 (நடுத்தர அளவு)
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
- மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
- உப்பு - 1/2 மேசைக்கரண்டி
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
தேவையான சமையல் உபகரணங்கள்
- தோசைக்கல் - மாங்காய், தக்காளி, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்க பயன்படும்
- தட்டு - வதக்கிய பொருட்களை எடுத்துவைக்க
- மிக்ஸி ஜார் - சட்னி அரைக்க
- கத்தி - மாங்காய், தக்காளி நறுக்க
- வெட்டும் பலகை - நறுக்கும் பணிக்கு
- பரிமாறும் கிண்ணம் - சட்னி பரிமாற பயன்படுத்த
செய்முறை :
- வெஜிடபிள்ஸ் தயார் செய்யவும்:
- முதலில் மாங்காயையும் தக்காளியையும் பாதியாக நறுக்கி வச்சுக்கோங்க
- வதக்கல் செய்முறை :
- ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதை சூடாக விடுங்கள்,
- அதில் எண்ணெய் ஊற்றி மாங்காய், தக்காளியையும்,பச்சை மிளகாவையும் போட்டு நல்லா வதக்கவும்.
- நல்லா எண்ணெய்யில் முன்னும் பின்னும் வேகும் வரை வதக்கிகோங்க.
- சுடு ஆற விடுங்கள்:
- பொன்னிரமாக மாறியதும் அதை ஒரு தட்டில் எடுத்து சூடு ஆற விடுங்கள்.
- சூடு ஆறியதும் மாங்காவின் தோலை ஈஸியாக நீக்கிவிடலாம்.
- அரைத்தல்:
- ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வதக்கிய மாங்காய் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்துகோங்க.
- அது கூடவே நறுக்கியா வெங்காயம், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி, உப்பு சேத்து நல்லா அரச்சுகோங்க.
- தேவைப்பட்டா தண்ணீ சேர்த்து கொஞ்சம் கொர கொறப்ப அரச்சு எடுத்துக்கோங்க.
- சூப்பரான "சுவையான வைரல் மாங்கா சட்னி ரெடி" ஆயிடுச்சு.
பரிமாறும் முறை:
- இட்லி, தோசை, உப்மா, சப்பாத்தி, அரிசி வகைகள் (முருங்கைக்காய் சாதம், சாதம் பிசைந்து) ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
- பரோட்டா அல்லது அப்பம் போன்ற மென்மையான தட்டுப்பதாரத்துடன் சேர்த்தாலும் ருசியாக இருக்கும்.
- பிரெட் ஸ்லைஸ்கள் மீது ஸ்பிரெடாகப் பயன்படுத்தலாம்.
- சிறு பாட்டிலில் ஊற்றி லஞ்ச் பாக்ஸில் சைடு டிஷ்ஷா -ஆக எடுத்துச் செல்லலாம்.
சிறப்பு குறிப்பு:
- மாங்காயின் பழுத்த தன்மை ருசிக்கு மிக முக்கியம் – சிறிது பழுத்த மாங்காய் சிறந்த சுவை தரும்.
- பச்சை மிளகாய் காரமாக இருந்தால் அளவை குறைக்கலாம், அல்லது ஒரு மிளகாயை வதக்காமல் q சேர்த்தால் நல்ல சுவை தரும்.
- கொத்தமல்லி சேர்ப்பதால் நறுமணமும் நிறமும் கூடும்.
- மிக்ஸியில் மிக நன்கு அரைக்காமல், சற்று கொர கொறப்பாக -ஆக வைத்தால் வைரல் ட்ரெண்ட் போல சட்னி ஆதேன்டிக் ஆ இருக்கும்
- வதக்கும் போது சற்று வெல்லம் சேர்க்கலாம் – இதனால் ஒரு பேலன்ஸ் ஆன சுவை கிடைக்கும்.
- நல்லெண்ணெய் அல்லது நாட்டெண்ணெய் பயன்படுத்தினால் நாட்டு ஸ்டைல் சுவை அதிகரிக்கும்.
சட்னியை ஃபிரிஜில் வைத்தால் 4–5 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
"Authentic Mysore Pak Recipe in Tamil | மென்மையான மைசூர் பாக் செய்முறை வீட்டிலேயே" -
வறுத்த முட்டை தொக்கு ரெசிபி -
மென்மையான ஃபட்ஜி பிரவுனி | வீட்டில் சுலபமாக செய்யும் சாக்லேட் கேக் ரெசிபி -
முட்டை பிரியாணி செய்முறை | சுலபமான Egg Biryani Recipe in Tamil

Add a Comment