டேஸ்டி பட்டர் கார்லிக் முட்டை | Butter Garlic Muttai
முட்டைய வச்சு நீங்க நெறய டிஸ் பண்ணிருப்பிங்க ஆனா ஒரு தடவ முட்டைய வச்சு பட்டர் கார்லி முட்டை ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க அசந்துருவிங்க. அதுல பட்டரயும் பூண்டையும் வச்சு சமைச்சு பாருங்க அதோட ருசி அவளோ சூப்பரா இருக்கும்.காலை உணவாகவும், விரைவான டின்னராகவும் இது ஒரு perfect “15-minute recipe”!
நம்ம வீட்டுல பொதுவா மட்டன் சிக்கன் லா எடுக்காத நேரத்துல இந்த முட்டை தா எல்லாத்துக்கும் பிடிக்குற நான்வெஜ் ஆவே இருக்கும். ஒரு சில பேரு எல்லா டிஸ் கூடயும் முட்ட வச்சு சாப்டற என்ன மாதிரி முட்டை பிரியாருக்களுக்குலாம் இந்த ரெசிபி ரொம்பவே பிடிக்கும். இந்த பட்டர் முட்டை பண்றதுக்கு ரொம்ப சிரம படனும் அவசியம் இல்ல ரொம்பவே சிம்பிள் ஆ பண்ணிடலாம்.
இந்த ரெசிபிய தோசை, சாதம், சப்பாத்தி, பூரி, வெஜ் பிரியாணி இந்த மாதிரி எல்லாத்துக்கும் இந்த டிஸ் சூப்பரான காமிணேஷன் ஆ இருக்கு. நீங்க முட்டைய வச்சு எந்த ரெசிபி பண்ணிருந்தாலும் சரி ஒன் டைம் இந்த மாதிரி இந்த பட்டர் கார்லிக் முட்டைய செஞ்சு பாருங்க. வீட்டுல இருக்க எல்லாரும் ரொம்பவே பிடிக்கும் ரொம்ப விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இத நீங்க பசங்க இல்ல ஆபீஸ் போறவங்களுக்கு லஞ்ச்கு கூட குடுத்து விடலாம். இந்த ருசியான பட்டர் கார்லிக் முட்டைய எப்படி செய்யலாம்னு பாக்க போறோம் வாங்க பாருங்க.
தயாரிப்பு நேரம்
15 நிமிடம்
சேவைகள்
2 நபர்
தேவையான பொருட்கள்:
- முட்டை - 3
- வெண்ணெய் (Butter) - 1.5 மேசை ஸ்பூன்
- பூண்டு (Garlic) - 6 பல் (நறுக்கியது)
- மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - 1/3 டீஸ்பூன் (approximately 1.5 to 2 grams)
- கறிவேப்பிலை - ஒரு கீற்று
- கொத்தமல்லி தழை -இரண்டு கீற்று (அலங்கரிக்க)
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய் / ஃப்ரைபேன் ( முட்டையும் பூண்டையும் வதக்க)
- ஸ்பேடுலா (முட்டையை கிளறவும், சுடவும்)
- பவுல் (முட்டையை அடிக்க)
- அளவுக் கரண்டி உப்பு, மிளகுத்தூள் போன்றவை சரியான அளவுக்கு
- கத்தி / நறுக்கும் பலகை பூண்டை நறுக்க பயன்படும்
- பரிமாறும் தட்டு / கப் இறுதி பரிமாற்றத்திற்கு
செய்முறை :
- முதலில் 3 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து, அதுல 1/3 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத்தூளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
- கடாயை மிதமான தீயில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்க்கவும்.
- வெண்ணெய் உருகியதும் பொடியா நறுக்கிய 6 பூண்டுகளை சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
- விருப்பமிருந்தால் இப்போது கறிவேப்பிலையும் சேர்க்கலாம்.
- வதங்கியதும் அடித்த முட்டை கலவையை ஊற்றவும்.
- ஸ்க்ராம்பிள் பண்ணலாமோ அல்லது ஆம்லெட் போலவோ செய்து கொள்ளலாம்.
- முட்டை வெந்து வந்ததும் மேல் கொத்தமல்லி தழையால் அலங்கரிதால். சூப்பரான பட்டர் கார்லிக் முட்டை ரெசிபி ரெடி.
- இதை சப்பாத்திக்கோ சாதத்துக்கோ சுட சுட வச்சு பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்.
பரிமாறும் முறை:
- Butter Garlic Muttai ஒரு multi-purpose side dish. இதை பலவிதமான உணவுகளுடன் நீங்கள் சேர்த்து பரிமாறலாம்:
- சப்பாத்தி, பரோட்டா, தோசை – சைட் டிஷ் ஆகவும் ரொம்ப நல்ல காம்பினேஷன்.
- சாதம் – சாதாரண வெதுவெதுப்பான சாதத்தோடு சிக்கன் மாறாக முட்டையை விரும்புபவர்களுக்கு சூப்பரான தேர்வு.
- புரி – சுடசுட புரியுடன் பரிமாறினால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
- வெஜ் பிரியாணி / ஜீரா ரைஸ் – ஸ்பைஸ்யான ரைஸ் வகைகளுடன் இது ஸ்பைசி டச் ஆ தரும்.
- ப்ரெட் / ரொட்டி ரோல் – இந்த முட்டையை Bread-க்குள் வைத்து ரோல் செய்வதால்கூட lunch box-க்கு நல்ல ஐடியா.
- சிறப்பு பரிமாற்றம்: மேலே கொத்தமல்லி தூவி, ஒரு துளி எலுமிச்சை சாறு மிதமாகப் பிழிந்து பரிமாறினால் சுவை இன்னும் பலமடங்காகும்!
குறிப்பு:
- வெண்ணெய் கொஞ்சம் அதிகமா இருந்தால் சிறந்த சுவை கிடைக்கும்.
- பூண்டு குவாண்டிட்டி உங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.
- மேலே சிறிது சிறந்த சீஸ் தூவி மெல்ட் செய்யலாம் – இது kids-க்கு பிடிக்கும்!
முட்டைய வச்சு நாம எல்லாரும் சாதாரமா ஆம்லெட், பொறியல், முட்டை குழம்பு மாதிரியான ரெசிப்பிகள் பண்ணி இருப்போம். ஆனா இந்த Butter Garlic Muttai மாதிரி ஒரு பிளாவோர்புல் ட்விஸ்ட் வேற லெவல்!
பட்டரின் richness-க்கும் பூண்டின் காரமும் கலந்து வரும் இந்த முட்டை ரெசிப்பி, சாதம் முதல் சப்பாத்தி வரை எந்த உணவுடனும் மேட்ச் ஆகும். செய்ய எளிது, சாப்பிட சூப்பர் டேஷ்டி. வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
“முட்டைய வச்சு ஒரு ட்ரை பண்ணி பாருங்க… இது நிச்சயமாக உங்கள் ரெகுலர் எக் ரெசிபி லிஸ்ட் -ல சேரும்!”
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
"Authentic Mysore Pak Recipe in Tamil | மென்மையான மைசூர் பாக் செய்முறை வீட்டிலேயே" -
வறுத்த முட்டை தொக்கு ரெசிபி -
மென்மையான ஃபட்ஜி பிரவுனி | வீட்டில் சுலபமாக செய்யும் சாக்லேட் கேக் ரெசிபி -
முட்டை பிரியாணி செய்முறை | சுலபமான Egg Biryani Recipe in Tamil








