🍗 மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா ரெசிபி | கடை சுவையில் மசாலா சிக்கன் சால்னா வீட்டிலேயே!
சிக்கன் என்றால் அனேகபேர் எப்போதுமே கை தூக்கித் தேர்ந்தெடுப்பது தான். சிக்கன் என்பது அசைவ உணவுகளின் ராணியாகவே இருக்கிறது. சிக்கனை இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா என எந்த மெனுவுடனும் ஜோடிக்கலாம். அதனால்தான் சிக்கன் அடிக்கடி எல்லோருடனும் டைனிங் டேபிளில் இடம்பிடிக்கிறது.
வீட்டிலேயே கடை சுவையில் சிக்கன் சால்னா செய்யலாமா? ஆம், கடைகளில் கிடைக்கும் சுவையை விட நம்ம வீட்டிலேயே சுத்தமாகவும், சுவையாகவும் செய்ய முடியும். அதிலும் மிளகு சேர்த்து சிக்கன் சால்னா செய்தால், அந்த வாசனையே வெறும் சப்பாத்திக்கு கூட தூண்டுதல் அளிக்கும்.
மதுரை ஜில்லா ஸ்டைல் சிக்கன் சால்னா ஒரு ருசிகரமான மாற்று. இது சாதாரண சிக்கன் கிரேவியைவிட சற்று மசாலா ரிச்சாகவும், வாசனை துள்ளலாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது ரொம்ப பிடிக்கும் வகையில் இருக்கும், குறிப்பாக மழைக்கால இரவுகளில் இதன் ஹீட் & ஸ்பைஸ் தன்மை மத்தவங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கும்.
தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா – எதுவாக இருந்தாலும் இது சூப்பர் சைடு டிஷ்! வீட்டு சமையலிலும் சுலபமாகச் செய்யக்கூடிய இந்த ரெசிபி, ஒரு முறை செய்து பார்த்தீங்கனா, நிச்சயம் வாரம் ஒரு முறை சேர்க்க விரும்புவீங்க. அப்படியொரு சுவை மிளகு சிக்கன் சால்னாவுக்கு உண்டு!
மிகவும் சுலபமாக, ஆனால் ருசியாக சிக்கனை சமைக்க விரும்புகிறீர்களா? அதற்கு மிகச் சிறந்த பதிலாக இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா இருக்கும். மிளகின் காரத்துடன் சிக்கனின் சுவையும் சேர்ந்தால், ஒரு மிக அழகான காம்பினேஷன் தான். இது வார இறுதியில் அல்லது சிறப்பு உணவாக குடும்பத்துடன் ரசித்து சாப்பிட உகந்தது.
வாழ்க்கையின் டெய்லி ரொட்டினில் சற்று வித்தியாசம் தேடுகிறீர்களா? சாதாரண சிக்கன் கிரேவி, பண்ணீர் கிரேவி என்று வழக்கமாக சமைக்கும் வகைகளை விட, இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா மிகவும் ரெப்பிரேஷ்ங் ஆவும் ஸ்பைசி யாவும் மற்றும் ஹோம்ஸ்டைல். சுடச்சுட இந்த சால்னாவை சப்பாத்தியோட பரிமாறினா – அது ஒரு பக்கா கம்பினேஷன்.
சில நேரங்களில் எளிமையான செய்முறை தான் மிகச்சிறந்த சுவையை தரும். வெறும் ஒரு கடாயில் 30 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா, உண்மையில் ஒரு நாள் மட்டும் செய்பவர்களால் வாரம் இருமுறை செய்யத் தோன்றும் அளவுக்கு ருசியாக இருக்கும்!
சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும். என்னதான் மட்டன், அதிலும் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதில் சிக்கன் சால்னாவும் ஒன்று. சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? விடுமுறை என்பதால் அந்த சப்பாத்திக்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து சாப்பிட நீங்கள் நினைக்கலாம். இந்த சிக்கன் சால்னா கடைகளில் கொடுக்கப்படும் சால்னாவைப் போன்று நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.மிகுந்த மசாலா வேண்டாமே, எளிமையாக ஒரு சிக்கன் சைடு டிஷ் பண்ணணும் என்பவர்களுக்கு இதுதான் சரியான தேர்வு.
சொல்லப்போனால் இந்த சால்னாவை நீங்கள் வீட்டில் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சப்பாத்தியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இது சிம்பிள் ரெசிபியாக வாங்கி இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னாவை எளிய செய்முறையில் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தயாரிப்பு நேரம்
40-50 நிமிடங்கள்
சேவைகள்
4-6 நபர்
தேவையான பொருட்கள்:
- சிக்கன் மசாலா பேஸ்ட்க்கு:
- எண்ணெய்-1/2 tbsp
- சீரகம்-1/2 tbsp
- சோம்பு- 1/2 tbsp
- மிளகு - 1/2 tbsp
- கசகசா - 1/2 tbsp
- ஏலக்காய் - 1
- பட்டை -1
- கிராம்பு -2
- தேங்காய் துருவியது - 2 tbsp
- பொறி கடலை -1 tbsp
- நிலக்கடலை - 10
- கொத்தமல்லி தழை - ஒரு கை பிடி அளவு
- இஞ்சி - ஒரு சின்ன துண்டு
- பூண்டு - 6
- தண்ணீ - கொஞ்சம்
- சால்னாவிற்கு:
- எண்ணெய் - 2 tbsp
- கிராம்பு - 2
- பட்டை -1
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- அண்ணாச்சி பூ -1
- பச்சை மிளகாய் -2
- வெங்காயம் -1 பொடியா நறுக்கிய
- தக்காளி -1
- உப்பு - 1 tbsp
- மிளகாய் தூள் - 1 tbsp
- மல்லி தூள் -1 tbsp
- புதினா இலை - 1 கை பிடி அளவு
- சிக்கன் -1/4 kg
- மசாலா பேஸ்ட்
- தண்ணீ
தேவையான சமையல் உபகரணங்கள்
- 1 பெரிய கடாய் அல்லது குக்கர்
- மிக்ஸி ஜார் (மசாலா அரைக்க)
- கரண்டி, குழம்பு கரண்டி
- தட்டு,
செய்முறை
- முதல சிக்கன் சால்னாக்கு தேவையான பேஸ்ட அரைச்சுக்கோங்க அதுக்கு
- கடாய அடுப்புல வச்சு எண்ணெய் ஊத்தி காஞ்சதும் சீரகம், சோம்பு, கசகசா, மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு இது எல்லாத்தையும் ஒன்னும் ஒன்னா போட்டுட்டே வந்து நல்லா எண்ணைல வருதுட்டு அடுத்து பொறிக்கடலையும் சேத்து வருதுட்டு கொஞ்ச நேரம் சூடு ஆறுற வர விட்ருங்க.
- நம்ம வருது வச்சு இருக்குறத மிக்ஸி ஜார்ல மாத்தி அதுல நிலக்கடல, தேங்கா, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தழை சேத்து நல்லா நைசா அரச்சு வச்சுக்கோங்க.
- அடுத்து குக்கர அடுப்புல வச்சு எண்ணெய ஊத்தி சூடானதும் கிராம்பு,பட்டை, ஏலக்காய், அண்ணாச்சி பூ, பிரியாணி இலை, பச்சை மிளகாய் போட்டு நல்லா வதக்கி விட்டுகோங்க.
- அதுல பொடியா நறுக்கி வச்சு இருக்க வெங்காயத்த சேத்து நல்லா பொன்னிரமா வர வரைக்கும் வாங்கிக்கோங்க. அதுகூடவே உப்பயும் சேத்துக்கோங்க.
- அதுக்கு அப்பறம் தக்காளிய போட்டு வதங்குனது மிளகாய் தூள், மல்லி தூள் போட்டு மசாலா வாட வரும் போதே நம்ம அரச்சு வச்சு இருக்க சால்னா பேஸ்ட அதுல சேத்து நல்லா வதக்கிக்கோணும்.
- அப்படியே அதுல சிக்கன நம்ம நல்லா மஞ்சள் போட்டு கழுவிட்டு அதுல சேத்துக்கலாம் நல்லா மசாலா கொத்துச்சு வந்ததுமே மூடி போட்டு மூடி ஒரு நாலு அஞ்சு விசில் வர வரைக்கும் அடுப்புலயே வேகணும்.
- அது அடுப்ப ஆஃப் பண்ணிட்டு விசில் போனதும் தெறந்து பாத்தா சூப்பரான மதுரை ஜில்லா பேமஸ் சிக்கன் சால்னா ரெடி ஆயிடுச்சு.
பரிமாறும் முறை
- இந்த சிக்கன் சால்னாவை சூடாக சப்பாத்தி, தோசை, இடியாப்பம், இட்லி அல்லது பரோட்டாவுடன் பரிமாறலாம்.
- மேலாக சிறிது வெந்தய கீரை பச்சடி அல்லது வெங்காய ரயிதா சேர்ந்தா இன்னும் சுவையாக இருக்கும்.
- சிறப்பு வாய்ந்த இரவு உணவாக அல்லது வீக் எண்ட் லஞ்ச் சாப்பாட்டுக்கு இது ஒரு அருமையான தேர்வு.
சிறந்த குறிப்புகள் (Tips)
- சிக்கனை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கழுவினால் வாசனையில்லாமல் இருக்கும்.
- தேங்காயும் நிலக்கடலையும் சேர்த்த மசாலா பேஸ்ட் சால்னாவுக்கு கிரேவிக்கு கொஞ்சம் காரம் மற்றும் ரிச்னஸ் தரும்.
- மிளகு சேர்க்கும் அளவினை உங்கள் காரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
மதுரை ஸ்டைலில் சிக்கன் சால்னா என்பது ஒரு பாரம்பரிய சுவையை மிளகின் காரத்துடன் இணைத்து தரும் ஒரு அற்புதமான ரெசிபி. வீட்டு சமைப்பில் கூட கடை சுவையை மீறி ஒரு சூப்பர் ஹிட் சைடு டிஷ் செய்யலாம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். வார இறுதி நாட்களில் அல்லது சிறப்பு விருந்துக்கு இந்த சிக்கன் சால்னாவை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் கண்டிப்பாக ரொம்ப ரொம்ப ரசித்து சாப்பிடுவார்கள்.
Search.......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
"Authentic Mysore Pak Recipe in Tamil | மென்மையான மைசூர் பாக் செய்முறை வீட்டிலேயே" -
வறுத்த முட்டை தொக்கு ரெசிபி -
மென்மையான ஃபட்ஜி பிரவுனி | வீட்டில் சுலபமாக செய்யும் சாக்லேட் கேக் ரெசிபி -
முட்டை பிரியாணி செய்முறை | சுலபமான Egg Biryani Recipe in Tamil





