கோவக்காய் ரோஸ்ட் (kovakkai roast)
இந்த கோவக்காய் ரோஸ்ட் செஞ்சு சாதத்தோட சேத்து சாப்பிட்டு பாருங்க அவ்ளோ சுவையாவும் ருசியாவும் இருக்கும். எல்லா பேரும் ரொம்பவே விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க இதுமட்டும் இல்ல இதுல நிறையவே சத்துக்களும் நிறைஞ்சு இருக்கு. இந்த கோவக்காய் சாப்பிட்டா நம்ம ஒடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானது அதும் டயப்பெடிக் இருக்குறவங்க கூட இத வாரத்துக்கு ரெண்டு மூணு தடவ சேத்துப்பாங்க.
கோவக்காய் ரோஸ்ட் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்ப்பியாக செஞ்சு கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாங்க. பார்த்தாலே நாக்குல எச்சி வரும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல இந்த கோவக்காய் கிடைக்கும்.இந்த கோவக்காய் ரோஸ்ட சாதம் போட்டு அதுக்கு சைடிஷ்ஷா கூட குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம்.இது குழந்தைகளுக்கான லஞ்ச் ரெசிபி மாறிட்டும் அடுத்து. ரொம்ப ரொம்ப அருமையான இந்த ரெசிபிய கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க. உங்க வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் கூட விருந்துல இந்த கோவக்காய் ரோஸ்ட பரிமாறலாம்.
எங்க அம்மா வீட்டுல இந்த கோவக்காய் அடி கடி சேத்துப்பாங்க. எங்க அம்மாவோட சமையல் கை வண்ணத்த இதுல கொண்டு வந்திருக்கேன். இத நாங்க அம்மா ஸ்டைல் கோவக்காய் வறுவல் கூட சொல்லுவோம். இவ்ளோ அருமையான இந்த கோவக்காய் ரோஸ்ட மதிய சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட்டா ரொம்பவே ருசியா இருக்கும். இப்பிடிபட்ட இந்த கோவக்காய் ரோஸ்டு ரெசிபிய நீங்க கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க அசந்து போயிடுவாங்க எல்லாரும். கண்டிப்பா இது ஒரு அட்டகாசமான ரோஸ்டா இருக்கும்.வாங்க இந்த கோவக்காய் ரோஸ்ட் (Kovakkai roast recipe) எப்பிடி செய்றதுனு பாக்கலாம்.
தயாரிப்பு நேரம்
25 நிமிடம்
சேவைகள்
3 நபர்
தேவையான பொருட்கள்:
- 200 கிராம் -கோவக்காய்
- 250 மி. லி - எண்ணெய் பொரிப்பதற்கு
- தேவையான அளவு உப்பு
- 1/2 டீஸ்பூன் - மிளகாய் தூள்
- 1/4 டீஸ்பூன் - மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் - சாம்பார் தூள்
- 1 டீஸ்பூன் - காஷ்மீர் மிளகாய் தூள்
தேவையான சமையல் உபகரணங்கள்
- வெட்டும் பலகையும் கத்தியும்
- கனமான அடிப்பகுதி உள்ள கடாயும்
- எண்ணெயில் பொரிக்க ஜல்லி ஸ்பூனும்
- கலக்க சிறிய கரண்டியோ ஸ்பாட்டுலாவும்
- எண்ணெய் வடிக்க கிச்சன் டிச்யூ
செய்முறை :
- கோவக்காய நல்லா கழுவி துடைச்ச, நீளமா கட் பண்ணி வச்சுக்கோங்க.
- கடாய ஸ்டவ்வுல வைச்சு எண்ணெய் ஊத்தி சூடானதும், கட் பண்ணி வச்சு இருக்க கோவக்காய துண்டு துண்டா சேத்து, வடை மாதிரி பொரிச்சு எடுத்துக்கோங்க.
- அடுத்து திரும்ப கடாய ஸ்டவ்வுல வைச்சு சூடானதும், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி, பொரிச்சு எடுத்த கோவக்காய சேத்து ரெண்டு நிமிஷம் வதக்குங்க.
- அடுத்து மேல கொடுத்து இருக்க எல்லா மசாலா பொடியயும் போட்டு, உப்பும் கறிவேப்பிலையும் சேர்த்து ரெண்டு நிமிஷம் வதக்கிவிட்டு இறக்குனா கோவக்காய் வறுவல் தயார்.
- அந்த வறுவல எடுத்து ஒரு பௌல சேர்த்து கிட்டா. இப்போ சூப்பரான சுவையான மொறு மொறு அம்மா ஸ்டைல் கோவக்காய் ரோஸ்ட் ரெடி ஆயிடுச்சு.
பரிமாறும் முறை:
- சாதம், சாம்பார் அல்லது ரசத்துடன் சூடாக பரிமாறலாம்.
- எலுமிச்சை சாதம், புளிசாதம் போன்ற வகை சாதங்களுடன் சைடிஷ் ஆக பரிமாறலாம்.
- குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்ல தயிர்சாதத்தோட சேர்த்து எளிதா கொடுக்கலாம் – க்ரிஸ்ப்பியா இருக்க அது ரொம்ப பிடிக்கும்.
- டீக்கும் சேர்த்து இலைட் ஸ்நாக்கா கூட சாப்பிடலாம்.
குறிப்பு:
- கோவக்காயை ஒரே அளவுல நல்லா நீளமா வெட்டுங்க – சமமாக வேகும்.
- கொஞ்ச கொஞ்சமா பொரிச்சா நல்லா கிரிஸ்ப்பியா இருக்கும்.
- கொஞ்சம் அரிசி மாவு சேர்த்தா சூப்பரா சாப்ட்டா வரும்.
- நிறதுக்கும் காரத்துக்கும் காஷ்மீர் மிளகாய் தூள் கூட கொறச்சு உபயோகிக்கலாம்.
- மசாலா தூள் வதக்கும்போது ஃப்ளேம கொஞ்சமா வச்சுக்கிட்டு வதக்கணும் – கரிஞ்சிடக் கூடாது.
இந்த அம்மா ஸ்டைல் கோவக்காய் ரோஸ்ட் ருசிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் நல்லது. உங்க ஹஸ்பண்ட்கும், குழந்தைகளுக்கும் லஞ்ச் பாக்ஸ், அப்டி இல்லலையா ஒரு சாதாரண நாள் உணவுக்கே இது சூப்பரான சைடிஷ். ஒரு தடவ செஞ்சு பாருங்க – உங்க வீட்டுல ரொம்பவே பாப்புலரான ரெசிபியா ஆகிடும்!
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
"Authentic Mysore Pak Recipe in Tamil | மென்மையான மைசூர் பாக் செய்முறை வீட்டிலேயே" -
வறுத்த முட்டை தொக்கு ரெசிபி -
மென்மையான ஃபட்ஜி பிரவுனி | வீட்டில் சுலபமாக செய்யும் சாக்லேட் கேக் ரெசிபி -
முட்டை பிரியாணி செய்முறை | சுலபமான Egg Biryani Recipe in Tamil

Add a Comment