பிரியாணி கத்திரிக்காய் தொக்கு :
பாய் வீட்டு பிரியாணிலாம் சாப்டுருக்கீங்களா கூடவே ஒரு கத்திரிக்காய் தொக்கு குடுப்பாங்க பாருங்க டேஸ்ட் அல்டிமேட் ஆ இருக்கும்.
சும்மாவே பிரியாணி 2 பிளேட் உள்ள போகும் இதுல கத்திரிக்கா தொக்கு கூட சேத்து சாப்பிட்டீங்கனா இன்னும் எக்ஸ்ட்ரா 2 பிளேட் உள்ள போகும் டேஸ்ட் அவளோ சூப்பரா இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க.
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சேவைகள்
4 -5 நபர்
தேவையான பொருட்கள்:
- கஞ்சா மிளகாய் – 2
- மிளகு – ½ ஸ்பூன்
- வெந்தயம் – ½ ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- பெரிய வெங்காயம் – 2 (பொடியா நறுக்கியது)
- கத்திரிக்காய் – ½ கிலோ
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- தனி மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
- குழம்பு மசாலா பொடி – 1 ஸ்பூன்
- தேங்காய் – 1 சிறிய துண்டு
- சின்ன வெங்காயம் – 10
- வெள்ள எள்ளு – 1 ஸ்பூன்
- பூண்டு – 5 பல்
- புளி தண்ணி – ½ கப்
- உப்பு & தண்ணி – தேவையான அளவு
தேவையான சமையல் உபகரணங்கள்
- அகலமான கடாய்
- தாளிப்பு கரண்டி
- மிக்ஸி ஜார்
- அளவுப் பொருட்கள் (ஸ்பூன் & கோப்பை)
செய்முறை :
- ஒரு கடாயில எண்ணெய் ஊத்திகோங்க அது கூடவே வெங்காயம் இப்போ அது கூட கத்திரிக்காய்,தக்காளி, பச்ச மிளகாய் சேத்து நல்லா வதக்கி விடடுக்கோங்க கத்திரிக்காய் நல்லா வதங்குனதும் அப்பறம் அக்கூட உப்பு, மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், குழம்பு மசாலா சேத்து லோ பிளேம் லயே நல்லா வதக்கிக்கோங்க.
- இப்போ ஒரு மிக்ஸி ஜார்ல தேங்காய், சின்ன வெங்காயம், வெள்ள எள்ளு 5 பல் பூண்டு சேத்து நல்லா அரச்சு அது கூடவே, புளி தண்ணியும் சேத்து தேவையான அளவுக்கு தண்ணி சேத்து நல்லா கலந்து விட்டுட்டு லோ பிளேம்ல மூடி போட்டு வச்சுட்டு நல்லா எண்ணெய்லாம் தெறஞ்சு வரவரைக்கும் வச்சீங்கனா ஒரு அல்டிமேட்டானா கத்திரிக்காய் தொக்கு ரெடி இது பிரியாணிக்கு மட்டும் இல்ல
- நார்மல் ரைஸ்க்குமே அவளோ சூப்பரா இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் வேற லெவல் இருக்கும்.
பரிமாறும் முறை:
- பிரியாணி & கத்திரிக்காய் தொக்கு – ஹெவன் காம்போ!
- நார்மல் சாதத்தோட கூட சூப்பர் கம்பினேஷன்.
- சப்பாத்தி, தோசைக்கும் சூப்பரா இருக்கும்.
குறிப்பு:
- நல்லா எண்ணெய் பிரியும்போது தான் தொக்கு ரெடியா இருக்கும்.
- கத்திரிக்காய் நல்லா வதங்கணும், இல்லனா கொஞ்சம் கசப்பு இருக்கும்.
- சுவைக்கு ஏற்ற மாதிரி காரத்தையும் புளிப்பையும் அட்டஸ்ட் பண்ணிக்கலாம்.
Add a Comment