இடிச்ச நாட்டு கோழி ரசம் :
நாட்டு கோழி ரசம் (Nattu Kozhi Rasam) வந்து தமிழ்நாட்டோட பாரம்பரிய உணவு வகைகளில ஒன்னு . இது சுவையாவும், சத்தானதாவும், ஈஸியா ஜீரணமாகக்கூடியதாவும் இருக்கும். இந்த உடல் உபாதைகளுக்கு மருந்தாவும் பயன்படுது. இடுச்சு வச்ச நாட்டு கோழி ரெசிபி சாப்ட்டா இருக்கீங்களா? சளி இருமாளுக்குலாம் நல்லா மெடிசினுக்கூட சொல்லலாம் நெஸ்ட் வீக் நான் வெஜ் வாங்க போகும் போது கூடவே நாட்டு கோழியும் வாங்கிட்டு வந்து இத சூப் வச்சு பாருங்க டேஸ்ட் அற்புதமா இருக்கும்.இன்னக்கி நம்ம இந்த சுவையான பரம்பரியமான நாட்டு கோழி ரசம் எப்படி பண்ணலாம்னு பிரீஃப் ஆ பாக்கலாம்.
தயாரிப்பு நேரம்
35-45 நிமிடம்
சேவைகள்
4 -5 நபர்
தேவையான பொருட்கள்:
- நாட்டு கோழி - 1/2 கிலோ (இறைச்சி மற்றும் எலும்புகள்)
- வெங்காயம் - 10 (சிறியது)
- பூண்டு - 4 பற்கள்
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 4
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
- சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
- மிளகு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 1 1/2 சொம்பு (குறைந்தது)
தேவையான சமையல் உபகரணங்கள்
- கத்தி: காய்கறிகள் மற்றும் இறைச்சியை நறுக்க.
- சட்டியா அல்லது பாத்திரம்: ரசம் செய்ய.
- குக்கர்: நாட்டு கோழியை வேக வைக்க (விரும்பினால்).
- கடாய்: மசாலா பொருட்களை வறுக்க.
- அரைக்கும் கல் அல்லது மிக்ஸி: மசாலா பொருட்களை அரைக்க.
- கரண்டி: சமைக்கும் போது கிளற மற்றும் பரிமாற.
- பரிமாறும் கிண்ணங்கள்: ரசத்தை பரிமாற.
செய்முறை :
- நாட்டு கோழில ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா நாட்டு கோழிய நல்லா இடுச்சு
- ஒரு சூப்பர் ஆனா ரசம் செய்றது எப்படினு பாக்கலாம் வாங்க
- ஃபஸ்ட் ஒரு கடாயில குண்டுமல்லி சீரகம் மிளகு எல்லாத்தையும் வறுத்து பவர்டர் ஆ அரச்சு வச்சுக்கோங்க
- அடுத்து ஒரு 10 சின்ன வெங்காயம் 4 பூண்டு ஒரு துண்டு இஞ்சி எல்லாத்தையும் தட்டி எடுத்துக்கோங்க
- இப்ப நாட்டு கோழியயும் நல்லா தட்டிக்கலாம் அடுத்து ஒரு சட்டியா வச்சு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ண ஊத்தி அற டேபிள்ஸ்பூன் சீரகம் போட்டு பொருஞ்ச உடனே தட்டி வச்சு இருக்க சின்ன வெங்காயத்தை சேத்து 2 நிமிஷம் குக் பண்ணிக்கலாம் கொஞ்சமா கருவேப்பிள்ளை நசிக்கி வச்ச இஞ்சி பூண்டு பேஸ்ட் சேத்து வதக்கி கிறனும்.
- இப்ப நாலு பச்சை மிளகா கொஞ்சமா கொத்தமல்லி சேத்து குக் பண்ணிக்கலாம்
- நாலு தக்காளி ஒரு டேபிள்ஸ்பூன் கல்லு உப்பு சேத்து கிரேவி ஆகுற வரைக்கும் குக் பண்ணிக்கோங்க
- இப்ப இடுச்ச நாட்டு கோழிய சேத்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேத்து ஒரு 5 நிமிஷம் குக் பண்ணிக்கோங்க
- அடுத்து 1 1/2 சொம்பு தண்ணி ஊத்தி ஒரு கொத்தி வந்த உடனே அரைச்ச மிளகு சீரகத சேத்து கிண்டிக்கலாம்
- 1 1/2 சொம்பு தண்ணி 1 சொம்பு தண்ணி ஆகுற வரைக்கும் நல்லா சுண்ட விடுங்க அவ்ளோதா ஒரு சூப்பர் ஆனா நாட்டு கோழி ரசம் ரெடி.
பரிமாறும் முறை:
- நாட்டு கோழி ரசத்தை சூடாக பரிமாறவும்.
- சாதத்துடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
- ரசத்தை கிண்ணத்தில் ஊற்றி, மேலே கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கலாம்.
- விருப்பப்பட்டால், சிறிது நெய் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு:
- நாட்டுக்கோழி கிடைக்கவில்லை என்றால், பிராய்லர் கோழியில் கூட இந்த ரசத்தை செய்யலாம். ஆனால் நாட்டுக்கோழியில் செய்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
- ரசத்தில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் (முருங்கைக்காய், கத்தரிக்காய் போன்றவை) சேர்த்துக்கொள்ளலாம்.
- காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.
- ரசத்தை பரிமாறும் முன், அதன் சுவையை சரிபார்த்துக்கொள்ளவும்.
- காரம் அல்லது உப்பு குறைவாக இருந்தால், தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.
- ரசத்தை சூடாக பரிமாறினால், அதன் சுவை மற்றும் மணம் மேலும் மேம்படும்
- இந்த பாரம்பரிய நாட்டுக்கோழி ரசத்தை செய்து சுவைத்து, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Add a Comment