இட்லி மாவில் பணியாரம் :
5 நிமிஷத்தில டக்குனு ஈவினிங் காபி இல்ல டீ கூடவே பணியாரம் சாப்பிட கொஞ்சமா இட்லி மாவு இருந்தாலே போதுமே!
எல்லாருமே சாந்தராம் ஆயிட்டாலே ஏதாவது சாப்பிட இருக்கானு நச்சரிச்சுகிட்டே இருப்பாங்க. காபி குடிக்கும் போது கூடவே பிஸ்கட், காரம் இருந்தா அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும்.
அதுலயும் பணியாரம் வகை இருந்த இன்னும் பிரமாதம் வயிறும் மனசும் நிரம்பிடும். அப்படி ஒரு பணியாரம் (paniyaram ) தான் இந்த பதிவில பாக்க போறோம்.
இந்த இட்லி மாவு பணியாரம் கொஞ்ச பொருட்கள வச்சு கம்மி நேரத்தில உடனடியாக செஞ்சுடலாம். உங்களோட டைமும் வேஸ்ட் ஆகாது. வீட்டுல இருக்குறவங்களுக்கும் வயிறு நெறம்பி உங்கள தொல்ல செய்றதயும் விட்ருவாங்க. வாங்க அத எப்பிடி செய்றதுன்னு பாக்கலாம்.
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சேவைகள்
4 நபர்
தேவையான பொருட்கள்:
- தேவையான அளவு இட்லி மாவு
- 1 வெங்காயம்
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் உளுந்த பருப்பு
- 1 பச்சை மிளகாய்
- கொஞ்சமா கருவேப்பிலை
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய்
- பணியாரக் கடாய்
- பணியார கம்பி
செய்முறை :
- முதல ஒரு கடாய அடுப்புல வச்சு பத்த வச்சுக்கோங்க. அதுல கடல பருப்பு உளுந்தம் பருப்பு சேத்து பொன்னிறமா வறுத்துக்கோங்க. அதுக்கு அப்பறம் பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கிக்கணும்.
- அப்பறம் நறுக்குனா வெங்காயம் சேத்து நல்லா வத்தகுனதுக்கு அப்பறமா இத எடுத்து இட்லி மாவுல சேத்து நல்லா கலந்துக்கணும். இட்லி மாவு நல்லா கெட்டியா இருக்கணும்.
- இப்போ பணியாரக் கடாய அடுப்புல வச்சு எல்லா குழியிலயும் கொஞ்சமா எண்ணெய் விட்டு ஒரு ஒரு குழியிலையும் இந்த மாவ ஊத்திட்டே வாங்க. ஒரு 2 நிமிஷம் கழுச்சு திருப்பி போடுங்க.
- நல்லா வெந்து உப்பி பணியாரம் போல வந்ததும் பணியார கம்பியால எடுத்து பரிமாற வேண்டிதான்.
- பிரமாதமா சாய்ங்காலமா ஒரு டம்ளர் டீ இல்ல காபியோட வச்சு சாப்டா அவ்வளவு ருசியா இருக்கும். நீங்களும் ஒன்னு டைம் உங்களுக்கு வீட்டுல ட்ரை பண்ணி உங்க பேமிலியா அசத்துங்க.
பரிமாறும் முறை:
- சூடான பணியாரத்தை சட்னி அல்லது சாம்பாரோட பரிமாறலாம்.
- டீ அல்லது காபியோட கூட சாப்பிடலாம்.
- இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். இதே போல இன்னும் நிறைய சமையல் குறிப்புகளுக்கு இந்த வலைத்தளத்தை பாலோ பண்ணுங்க.
குறிப்பு:
- பணியாரத்தை மிதமான தீயில் வேக வைக்கவும்.
- விருப்பப்பட்டா நீங்க இதுல கேரட், முருங்கைக்கீரை கூட சேர்த்துக்கலாம்.
- இட்லி மாவு கெட்டியா இருந்தா பணியாரம் நல்லா வரும்.
Add a Comment