கேரட் சட்னி ரெசிப்பி | 10 நிமிஷத்தில் சுவையான சட்னி இட்லி தோசைக்கு
கேரட் சட்னி
வீட்ல அடிக்கடி செய்யக்கூடிய டிபன் வகைகள் என்னவென்றால் இட்லி தோசை தான். இந்த இட்லி தோசைக்கு எப்பவுமே ஒரே மாதிரி தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அரைச்சு போர் அடுச்சு போச்சா அப்ப புதுசா இந்த மாதிரி ஒரு தடவை கேரட் சட்னி செஞ்சு பாருங்க. இது கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்ப பேமஸ் ஆக இருந்த ஒரு சட்னி. வீட்ல எப்பவுமே தேங்காய் சட்னி தக்காளி சட்னி வெங்காய சட்னி, சாம்பார் புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான காரசாரமான சிம்பிளான பொருட்களை வைத்து செய்யக்கூடிய கேரட் சட்னி செஞ்சு பாருங்க. இந்த சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
கேரட் சட்னி செய்வதுக்கு தேவையான பொருட்கள் கொஞ்சம்தான். வீட்டிலேயே எப்பவுமே இருக்கக்கூடிய கேரட், பச்சை மிளகாய், தாளிக்க கொஞ்சம் கடுகு, உளுந்து, கருவேப்பிலை மாதிரி எளிமையான சாமான்கள்தான். தேங்காயும் சேர்த்துக்கலாம் இல்லாமலும் செஞ்சுக்கலாம். தேங்காயுடன் செய்தா சட்னிக்கு இன்னும் கொஞ்சம் richness வரும். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் வேரியேஷன் பண்ணி புதுசா சாப்பிடலாம்.
இந்த சட்னி எப்படி செஞ்சாலும் நல்ல சுவைதான். அதேசமயம் இது கைவசமுள்ள பொருட்களால தான் செய்யப்படுவதால, வீட்ல காய்கறி இருக்காத நேரத்துல கூட இந்த சட்னி ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். மினிட்ஸ் குள்ள தயார் பண்ணிக்கலாம். வேலைக்குப் போற ஒர்கிங் உமென் கிட்டதட்ட எல்லாருக்கும் இந்த மாதிரி குய்க் ரெசிப்பீஸ் ரொம்பவே யூஸ் ஆகும்.
சில சமயம் காலை டிபன் வேறையா இருந்தாலும் சைட்ல ஒரு spicy சட்னி வேணும் போல இருக்கும். அந்த மாதிரி நேரத்துல இந்த கேரட் சட்னி perfect. காரம், இனிப்பு, நாவுக்கு சாட்டி மாறாத சுவை — எல்லாம் இதில் இருப்பதால குழந்தைகளும் விருப்பமா சாப்பிடுவாங்க. இந்த சட்னியை சின்னவயசு குழந்தைகளுக்கு கொடுக்குறப்போ சாட்ஸா காரத்தை கம்மி பண்ணி செய்யலாம்.
ஒரே ஒரு தடவை இந்த சட்னியை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த சட்னியை நீங்க செய்வீங்க. அந்த அளவுக்கு இந்த சட்னி ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். சுவையான இந்த சட்னியை கண்டிப்பா ஒரு தடவை இட்லி தோசைக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இட்லி தோசையை வேணாம் அப்படின்னு சொன்னவங்க கூட பத்து இட்லி பத்து தோசை கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த சட்னி சாப்பிட வைக்கும். இந்த சட்னி செய்வது ரொம்ப ஈஸி தான். இந்த சட்னி குழந்தைகளுக்கு காலைல பிரேக் பாஸ்டுல சேத்துக்குறது உடம்புக்கு ரொம்பவே நல்லது. வாங்க அப்படி பட்ட சூப்பரான கேரட் சட்னி எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சேவைகள்
2-3 நபர்
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் - 2 tbsp
- கேரட் - 1 கப் துருவியது
- சின்ன வெங்காயம் - 8
- பூண்டு - 4 பல்
- பச்சை மிளகாய் - 2-3
- இஞ்சி - சின்ன துண்டு
- புளி - சின்ன நெல்லிக்காய் சைஸ்
- உப்பு -1/2 tbsp
- கடுகு - 1 tbsp
- உளுந்து - 1 tbsp
- கறிவேப்பிலை - 2 கீற்று
- காளான்கள்: 1 பவுண்டு (சுமார் 500 கிராம்) காளான்கள், உங்களுக்கு விருப்பமான வகை. தண்டுகளை நீக்கி, பெரியதாக இருந்தால் பாதியாகவோ அல்லது நான்காகவோ வெட்டவும்.
- வெங்காயம்: 4 நடுத்தர, பொடியாக நறுக்கியது
- இஞ்சி-பூண்டு விழுது: 2 ½ தேக்கரண்டி
- தக்காளி: 2 நடுத்தர + 2 சிறிய, நறுக்கியது
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய்
- கரண்டி கிளற
- மிக்ஸி ஜார்
- தாளிக்கிற சிறிய கரண்டி
- பரிமாற கிண்ணம்
செய்முறை
- கடாய அடுப்புல வச்சு சூடானதும் எண்ணெய் ஊத்தி அதுல வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சேத்து வெங்காயதோட பச்சை வாசன போயி நல்லா ரெட்டிஸா மாறுற வரைக்கும் வதக்கிக்கோங்க.
- அதுல துருவினா கேரட்ட சேத்து அதுகூடவே உப்பயும் போட்டு கொஞ்ச நேரம் வதக்குங்க.
- அடுத்து புளிய சேத்து கேரட் நல்லா வதங்குற வரைக்கும் அப்போ அப்போ கிளறி விட்டுட்டேன் இருங்க கரண்டிய வச்சு
- தேவப்பட்டா அதுல கொஞ்சமா தண்ணீ தெளிச்சு விட்டுக்கலாம்.அதுக்குனு ரொம்பவும் சேத்துக்க வேண்டாம்.
- நல்லா கேரட் வெந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு அத கொஞ்ச நேரம் ஆற விடுங்க
- சூடு ஆறுனதும் அத அப்டியே மிக்ஸி ஜார்ல மாத்திக்கோங்க, ரொம்பவும் நைஸா அரைச்சுட வேண்டாம் ஒரு அளவுக்கு கரடு முரடா இருந்ததா சட்னி சாப்பிட நல்லா இருக்கும்.
- அரைச்ச கேரட் சட்னியா ஒரு கிண்ணத்துல மாத்திட்டு,அடுத்து ஒரு தாளிப்பு கரண்டில எண்ணெய் ஊத்தி எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு போட்டு பருப்பு நல்லா வெடுச்சு வரணும், கருக்கவும் கூடாது.
- இப்போ தயாரான சட்னில இந்த தாளிப்ப அதுக்கு மேல ஊத்தி நல்லா கிண்டி விட்ருங்க.
- அவ்ளோதான் சூப்பரான கேரட் சட்னி தயாராயிடுச்சு.
பரிமாறும் முறை
- இந்த சட்னிய சூடா இருக்கும் இட்லி, தோசை, பனியாரம், ஆப்பம், ரவை உப்புமா, வெஜிடபிள் ரோல், சப்பாத்தி போன்றவற்றோட சூப்பரா பரிமாறலாம்.
- குழந்தைகளுக்கு சாண்ட்விச்சு பிரெட் ல பயன்படுத்தலாம்.
- தோசைக்குள்ள ஸ்பிரெட் பண்ணி மசாலா தோசை மாதிரி கூட செய்து பாருங்க –பிரண்ட்ஸ் அட்டகாசமா இருக்கும்!
குறிப்பு
- கேரட்டை மெதுவா வதக்கினா சுவை நல்லா வரும். கேரட் கொஞ்சம் பொன்னிறம் ஆகும் வரைக்கும் வதக்குங்க.
- பச்சை மிளகாய் காரசாரமா இருக்கும். இன்னும் காரமா வேணும்னா மிளகாய் எண்ணிக்கைய கூட்டிக்கலாம்.
- புளி சேர்க்கும் போது ரொம்பவே அதிகமா போட வேண்டாம். சுவை மிதமாக இருக்கணும்.
- சட்னியை நைஸா அரைச்சா பச்சை வாசனை இருக்கும். கொஞ்சம் கரடுமுரடா கொரகொரப்பா இருக்கணும்.
- தேங்காய் சேர்க்காமலே இந்த சட்னி செஞ்சா அதிக நேரம் கேட்டு போகாம இருக்கும்.
சாதாரண டிபன்களையும் சாப்பிட சுவையா மாற்றி வைக்கும் ஒரு கரட் சட்னி தான் இது. ரொம்ப கம்மியான நேரத்துல, சிம்பிளான சாமான்களால ஆன இந்த சட்னி, ரொம்பவே நியூட்ரிஷன் கூட. வீட்ல ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு போர் அடிச்சா, ஒரு தடவை இந்த கேரட் சட்னி செஞ்சு பாருங்க. கண்டிப்பா பேமிலி புல்லா விருப்பமா சாப்பிடுவாங்க. சுடசுட இட்லி தோசையோட பரிமாறி சாப்பிட்டா ரொம்பவே சந்தோஷமா இருக்கும்!
Search.......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
How to make Crispy, Flavorful Murukku - Masala Murukku -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
ஆப்கானிஸ்தானின் சுவை: சுவையான ஆப்கானி ஆம்லெட் (ககினா) செய்வது எப்படி -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
பிரஷர் குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி - Pressure Cooker Chicken Biryani seivathi epdi in Tamil -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment