சுவையான ராஜ்மா கிரேவி ஒரு ஹோட்டல் ஸ்டைலில் / rajma recipe in tamil
ராஜ்மா மசாலா பஞ்சாப்ல பண்ற ஒரு பிரபலமான ரெசிபி. இத கிட்னி பீன்ஸ் அப்பினும் சொல்லுவாங்க. இந்த ரெசிபி உடம்ப குறைக்கணும்னு நினைகுறவங்க எல்லாரும் உங்க சாப்பாட்டுல எடுத்துக்கலாம். இது மட்டன் சிக்கன் கிரேவியலாம் மிஞ்சுடுற அளவுக்கு ரொம்ப ருசியானது, இத ஈசியாக சமையலுக்கு புதுசா இருக்குறவங்க கூட சுலபமா பண்ணிடலாம்.இந்த ராஜ்மா கிரெவிய சாதம், நெய் சாதம், சப்பாத்தி, இட்லி தோசை, புலாவ் இந்த மாதிரி எல்லாத்துக்கும் ரொம்பவே சூப்பரா இருக்கும். கீழ கொடுத்து இருக்குற மாதிரி செஞ்சு பாடுங்க டேஸ்ட்டு அல்டிமேட்டா இருக்கும்.
தயாரிப்பு நேரம்
1 மணி நேரம்
சேவைகள்
4-6 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- ராஜ்மா - 1 கப்
- இலவங்க பட்டை 1
- கிராம்பு -4
- ஏலக்காய் - 4
- அண்ணாச்சி பூ -1
- கல்பசி - சிறிதளவு
- சோம்பு - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1,1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய் தூள்- 1 ,1/2 டீஸ்பூன்
- தனியா தூள் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 2-3
- கொத்தமல்லி - 1/4 கப்
- எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவைப்படும் அளவு
தேவையான பாத்திரம் :
- குக்கர்
- கடாய்
- கரண்டி
- கத்தி
- கத்திவெட்டு பலகை
- கிண்ணம்
செய்முறை :
- ராஜ்மாவை 8 மணி நேரம் அல்லது அதற்கு முன் ஊற விடவும். ஊற வைத்த ராஜ்மாவை குக்கரில சேர்த்து மூழ்குற அளவுக்கு தண்ணீ ஊத்தி அதுகூட 1/2 ஸ்பூன் ( மஞ்சள் தூள், மிளகாய் தூள்) போட்டு 6 இல்ல 7 விசில் வர வேக வச்சுகோங்க.
- வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாயை நறுக்கி, ஒரு கிண்ணத்தில வைச்சு இருங்க
- ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, இலவங்க பட்டை ,கிராம்பு ,ஏலக்காய், அண்ணாச்சி பூ, கல்பசி ,சோம்பு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போட்டு தாளிக்கனும்
- பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாயை போட்டு நல்லா வதக்கிகோங்க
- பிறகு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பை போட்டு நல்லா கலக்கிகணும்
- பின்பு, வேக வச்சு இருக்க ராஜ்மாவ போட்டு நல்லா கலக்கணும்
- பிறகு, தேவையான அளவு தண்ணீ சேர்த்து, நல்லா கொதிக்க விடனும். இதுகூடவே அரச்சு வச்சு இருக்க தேங்காய சேர்த்து மூடி போட்டு ஒரு 10 இல்லா 15 நிமிசம் வேகவச்சுகணும்.
- இப்போ ராஜ்மா மசாலா கிரெவி தயார் ஆயிடுச்சு. இத சாதம் இல்ல சப்பாத்தியோட பரிமாறுங்க.
- இந்த செய்முறை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பரிமாறும் முறை:
- ராஜ்மா மசாலாவை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்
- நீங்கள் தயிர் அல்லது பச்சடியுடன் ராஜ்மா மசாலாவை பரிமாறலாம்.
குறிப்பு:
- ராஜ்மாவை ஊற வைப்பது அவசியம்
- மசாலாவை சரியாக கலக்க வேண்டும்
- தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்
Add a Comment