குலாப் ஜாமூன்
தீபாவளி வந்துறுச்சு நாலே குலாப் ஜாமூன் ஞாபகம் வந்துரும் .gulab jamun எனக்கு தின்ன தின்ன திகட்டவே திகட்டாது சொல்ற கூட்டமும் இருக்காங்க. இவளோ குடுத்தாலும் லபக் லபக் நு முளுங்குறவங்களும் இருக்காங்க .இனிப்பு வகைலயே ரொம்ப சிம்பிளா செய்யக்கூடியது குலாப் ஜாமூன் தான்.இப்பிடி எல்லாரும் விரும்பி சாப்பிட்ர குலாப் ஜாமூன் எப்பிடி வீட்டில செய்யுறதுனு பல பேருக்கு பயம் இருக்கும் அதுலயும் குண்டு குண்டா எப்படி பண்ண முடியுமா? அப்டின்னு தெரியாம இருக்குற அவங்களுக்கு தான் இந்த பதிவு.
குலாப் ஜாமூன் பாக்கவே அழகாக நீங்க ஆசபட்டது மாதிரியே குண்டான சூப்பரான குலாப் ஜாமூன் இந்த முறை படி பண்ணி பாருங்க அசந்துறுவிங்க
தயாரிப்பு நேரம்
30-40 நிமிடம்
சேவைகள்
6-7 நபர்
தேவையான பொருட்கள்:
- 2 பாக்கெட் - குலாப் ஜாமூன் மிக்ஸர்
- 4 டம்ளர் - தண்ணீ
- 4 டம்ளர் - சக்கர (சீனி)
- 1/2 டம்பள் - காச்சாத பால்
- 1 டேபிள்ஸ்பூன் - நெய்
- 3 - ஏலக்காய்
- பொரிக்க தேவையான எண்ணெய்
தேவையான சமையல் உபகரணங்கள்
- மாவு சலிக்க சல்லடை
- மாவு கலப்பதற்கு கிண்ணம்
- உருண்டை பிடிச்சு வைக்க தட்டு
- பொரிக்குறதுகு கடாய்
- கரண்டி
செய்முறை :
- ஒரு பெரிய சட்டுல குலாப் ஜாமூன் மிக்ஸர், நெய் , தண்ணிக்கு பதிலா காச்சாத பால சேர்த்து நல்லா எல்லா மாவும் ஒன்ன கொஞ்ச்ம் லூசவே பெசஞ்சு வச்சுடுங்க ஒரு ரென்டு நிமிசம் கழிச்சு கைல ஒட்டாம சின்ன சின்ன உருண்டையா விரியமா உரிட்டி வச்சுக்கோங்க
- அடுப்பல கடாய் வச்சு தண்ணீ ஊத்தி ,அதுல சக்கர, ஏலக்காய் தட்டி போட்டு நல்லா கரையட்டும்,நல்லா கொதிச்சதும்.பாகு பததுக்கு வந்ததும் அடுப்பா ஆஃப் செஞ்சுடுங்க
- அடுத்து அடுப்ப நல்லா ஹையா வச்சு ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி நல்லா சூடானத்து அடுப்ப கொஞ்சமா வச்சுட்டு உருட்டி வச்ச உருடைய நல்லா பொருசுக்கணு
- பொரிச்ச எல்லா உருண்டையயும் காச்சி வச்சு இருக்குற பாகுல போட்டு ஊற விடுங்க
- நல்லா ஊருன பின்னாடி அத ஒரு சட்டில மாதிக்கணும்.இப்போ சுலபமான ருசியான குண்டு குண்டு குலாப் ஜாமூன் ரெடி
பரிமாறும் முறை:
- குலாப் ஜாமூனை ஒரு கப் கேக் மாதிரி அலங்கரிகலாம்
- கீழ ஒரு சின்ன கப் இல்லனா ஒரு கிண்ணத்தில குலாப் ஜாமூன வைச்சு, அது மேல பாதாம் பிஸ்லிய தூவி விட்டு பரிமாரலாம்.
குறிப்பு:
- மாவு சாஃப்டா இருக்கணும் அப்டி இல்ல காஞ்சு போயிருச்சு அப்படினா மாவு பிசையும் போதே லைட்டா பால் சேத்துகோங்க
- சக்கர பாகு கொஞ்சம் கெட்டியா இருக்கணும்
Add a Comment