வாய்க்கு ருசியாக மதுரை ஸ்டைலில் நெய் மட்டன் சுக்கா அவசியம் மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க
பொதுவா நான் வெஜ் செய்யும்போது ஒரு சிலர் நிறைய மசாலாக்கள் எல்லாம் சேர்த்து போட்டு செய்வாங்க ஆனா ஒரு சிலர் சுத்தமா எந்த மசாலாவுமே போடாம சிலர் ஆனா நிறைய மசாலாக்கள் போடுவதை விட கம்மியான மசாலாக்கள் போட்டு செய்ற ரெசிப்பீஸ் இன்னுமே சூப்பரா இருக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிலா சின்ன வெங்காயமும் மதுரை ஸ்டைலில்நெய் சேர்த்து செய்யப் போற இந்த மதுரை நெய் மட்டன் சுக்கா ரொம்பவே டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த மதுரை நெய் மட்டன் சுக்காவை வீட்ல ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் எப்பவுமே இது தான் செய்வீங்க.
வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் கூட இத செஞ்சு கொடுங்க. மட்டன் சுக்காவுக்கு பதிலா இந்த மாதிரி சிம்பிளான சின்ன வெங்காயமும் நெய்யும் சேர்த்து செய்யுற மதுரை நெய் மட்டன் சுக்கா செஞ்சு குடுங்க. இதோட டேஸ்டு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் பொதுவா சின்ன வெங்காயம் சேர்த்து செய்ற எல்லா ரெசிபீயுமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அதுமட்டுமல்லாமல் சின்ன வெங்காயத்துல நிறைய நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கு. அதனால சின்ன வெங்காயமும் நெயும் சேர்த்து செய்ற இந்த மட்டன் சுக்கா ரெசிபியை வீட்ல செஞ்சு பாருங்க உங்களுக்கு சமைக்கிறதுக்கு நேரம் குறைவா இருந்துச்சு அப்படின்னா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க சட்டுனு முடிஞ்சிடும்.
ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு சூப்பரான டேஸ்ட்ல ஒரு மட்டன் சுக்கா செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டன் எடுக்கும்போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க எப்பவும் ஒரே மாதிரியான மட்டன் சுக்கா மட்டன் குழம்பு என வைக்காமல் சிம்பிளா வைக்கக்கூடிய இந்த ரெசிபி எப்படி சிம்பிளா ஒரு தடவை செஞ்சுதான் பாருங்களேன். ரசம் சாதத்துக்கு அல்டிமேட்டா இருக்கும். அதுமட்டுமில்லாம சுட சுட சாதத்துல போட்டு பெரட்டி சாப்பிடலாம். சுவையான இந்த மதுரை நெய் மட்டன் சுக்கா ரெசிபி. வீட்ல நிறைய வேலை இருந்துச்சுன்னா அப்போ வேலைய குறைக்கிறதுக்காக இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க. சுவையான சூப்பரான இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மதுரை நெய் மட்டன் சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சேவைகள்
2 to 3 நபர்
தேவையான பொருட்கள்:
- மட்டன் மேரிநேஷன் :
- மட்டன் – ½ கிலோ
- உப்பு – 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
- மசாலா காய்ச்சி அரைக்க :
- பட்டை – ஒரு சின்ன துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- அண்ணாச்சி பூ – 1
- மல்லி – 1 டேபிள்ஸ்பூன்
- மிளகு – ½ டேபிள்ஸ்பூன்
- சோம்பு – ½ டேபிள்ஸ்பூன்
- சீரகம் – ½ டேபிள்ஸ்பூன்
- காஞ்ச மிளகாய் – 6
- கறிவேப்பிலை – 3 கீற்று
- தாளிக்க
- நெய் – 1 டேபிள்ஸ்பூன்
- நல்ல எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
தேவையான சமையல் உபகரணங்கள்
- குக்கர் – மட்டன் வேக வைக்க
- வாணலி / கடாய் – மசாலா வறுக்கவும், இறுதியில் சுக்கா வதக்கவும்
- மிக்ஸி ஜார் – வறுத்த மசாலாவை பொடியாக அரைக்க
- ஸ்பூன் – சமைக்கும் போது கலக்கவும், சுக்கா வறுக்கவும்
- கத்தி – வெங்காயம், காஞ்ச மிளகாய் போன்றவை நறுக்க
- வெட்டுபலகை – வெட்ட பயன்படுத்த
- சிறிய கிண்ணங்கள் / கப் – மசாலா, எண்ணெய், நெய் அளவிட
- ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டு – வேக வைத்த மட்டன், மசாலா வைக்க
செய்முறை
- மட்டன் மேரிநேட் :
- மட்டன் மீது உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது
- அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 20–30 நிமிடம் ஓய்வெடுக்க விடவும். (சுவை நன்றாக ஊறும்)
- மசாலா காய்ச்சி அரைத்தல் :
- ஒரு வாணலியில் எண்ணெய் போடாமலே அனைத்து வறட்டுப் பொருட்களையும் (பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, மல்லி, மிளகு, சோம்பு, சீரகம்) லேசா வறுக்கவும்.
- காஞ்ச மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மணம் வரும் வரை வறுக்கவும்.
- இதை குளிர்ச்சி அடையவிட்டு மிக்ஸியில் பொறி மாசா மாதிரி கொஞ்சம் கொரகரப்பாக அரைக்கவும்.
- 👉 மதுரை ஸ்டைலின் ரகசியம் — மசாலா மிக மெத்தையாக அரைக்கக்கூடாது.
- மட்டன் வேக வைத்தல் :
- குக்கரில் மேரிநேட் செய்த மட்டன் + அரைத்த மசாலா + ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 4–5 விசில் வரைக்கும் வேகவிடவும்.
- குக்கர் திறந்தபின்:
- மட்டன் நன்றாக வெந்து இருக்க வேண்டும்
- வேகவைத்த தண்ணீரை எடுத்து வைக்கவும் — இது சுக்காவுக்கு ருசி சேர்க்கும்.
- முழுவதும் தண்ணீர் குறைந்து மட்டன் மெலிதாக வெந்திருக்க வேண்டும்.
- தாளித்து சுக்கா செய்யல்:
- கடாயில் நெய் – 1 டேபிள்ஸ்பூன் நல்ல எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து சூடாக்கவும்.
- நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
- அடுத்து:
- அரைத்த மசாலா, வேக வைத்த மட்டன், மட்டன் சாறு (தண்ணீர்) — தேவையான அளவு மட்டும்
- அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பெரிய தீயில் சாறு குறைந்து சுக்கா மாதிரி ட்ரை ஆகும் வரை வதக்கவும்.
- கடைசியில் மீதமான நெய் ½ டேபிள்ஸ்பூன் சேர்த்து கிளறவும்.
பரிமாறும் முறை
- சுக்கா சூடாக இருக்கும் போது உடனே பரிமாறுவது ருசி அதிகரிக்கும்.
- வெங்காய வட்டம் மற்றும் எலுமிச்சை துண்டு ஒன்றாக பக்கத்தில் வைத்து பரிமாறவும்.
- கடைசியில் கறிவேப்பிலை கொஞ்சம் மேலே தூவி நறுமணத்தை அதிகரிக்கலாம்.
- சப்பாத்தி, பரோட்டா, தோசை, கல் தோசை, வெள்ளை சாதம், பிரியாணி ஆகியவற்றுடன் சிறப்பாக சேர்க்கலாம்.
- பரிமாறும் பிளேட்டில் வாழைஇலை விரித்து பரிமாறினால் மதுரை ஸ்டைல் மிக அழகாக தெரியும்.
- விருந்துக்கு பரிமாறும்போது ½ டீஸ்பூன் நெய் மேலே தெளித்தால் சுவை இரட்டிப்பு ஆகும்.
குறிப்பு
- மிளகு அதிகமா இருந்தா தான் மதுரை ஸ்டைல் சுவை வரும்.
- சுக்கா ட்ரை ஆகும் வரை வறுக்கும்போது சீறிப் பொங்கும் — அதுதான் உண்மையான சுக்கா.
- சின்ன வெங்காயம் தான் முக்கியம்; பெரிய வெங்காயம் ருசியை குறைக்கும்.
மதுரை ஸ்டைல் நெய் மட்டன் சுக்கா வீட்டிலேயே எளிதாக, ஹோட்டல் தரத்தில் செய்து சாப்பிடக்கூடிய ரெசிபி. சரியான மசாலா அளவு, நெய் பிளவோயூ மற்றும் மட்டன் பக்குவமா வெந்தது — இவை மூன்றும் சேரும்போது சுவை அட்டகாசமா இருக்கும். குடும்ப விருந்து, வார இறுதி ஸ்பெஷல் மதிய உணவு, அல்லது பரோட்டாவுடன் சாப்பிட வேண்டிய கார சாரமான சைடுடிஷ் — எந்த நேரத்துக்கும் இது பெஸ்ட்.
Search.......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
How to make Crispy, Flavorful Murukku - Masala Murukku -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
ஆப்கானிஸ்தானின் சுவை: சுவையான ஆப்கானி ஆம்லெட் (ககினா) செய்வது எப்படி -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
Prawn Ghee Roast Recipe/Famous Mangalorean Prawn Ghee Roast -
பிரஷர் குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி - Pressure Cooker Chicken Biryani seivathi epdi in Tamil
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment