பாலக்கீரை மசியல் (Paalak keerai)
இந்த பாலக்கீரைல நெறய ரெசிபி இருக்கு அது என்னனா இதுலயே தொக்கு பண்ணுவாங்க பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், பாலக் சப்பாத்தி அப்பிடின்னு சொல்லிட்டே போலாம். ஆனா நம்ம இப்போ பாக்க போற ரெசிபி பாலக்கீரை மசியல். இது ரொம்பவே ஈஸியான ரெசிபியா இருந்தாலும் இதோட டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். இத குழந்தைகளுக்கு கண்டிப்பா சாதத்துல போட்டு பெசஞ்சு குடுக்கலாம்.
இதுல இரும்பு சத்தும், ஹீமோகுளோபினும் அதிகம். இத வாரத்துல ரெண்டு மூணு நாள் சாப்பிடா ரொம்பவே நம்ம உடம்புக்கு நல்லது. இந்த கீரை சாப்டரனால நிறைய பலன் இருக்கு.அதுனால கண்டிப்பா இத அடிக்கடி சேத்துக்க மறந்துராதீங்க. இந்த பாலக்கீரைய சர்க்கரை நோயாளிகளுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது அது மட்டுமில்லாம இந்த பாலக்கீரையில நெறயா போலிக் ஆசிட் இருக்குது, இது கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது.
இந்த பாலக்கீரை மசியல் ரெசிபிய கண்டிப்பா நீங்க வீட்டுல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இப்பிடிபட்ட பாலக்கீரை மசியல நம்ப ரொம்ப ரொம்ப கம்மியான பொருள வச்சு ரொம்பவே சுலபமா பாலக்கீரை மசியல பண்ணப்போறோம்.
இத பசங்க லஞ்சுக்கும் இந்த ரெசிபிய சாதத்துக்கு கூடவே வச்சு விடலாம். அவங்க புல்லா முடுச்சுட்டு வெறும் லஞ்சு பாக்சோடாத வீட்டுக்கு வருவாங்க.இப்போ வாங்க இத எப்படி பண்ணலாம்னு பாக்கலாம். பாக்குறத்தோட மட்டும் இல்லாம கண்டிப்பா இத நீங்க உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க மிஸ் பண்ணிராதீங்க.
தயாரிப்பு நேரம்
25 நிமிடம்
சேவைகள்
2-3 நபர்
தேவையான பொருட்கள்:
- 1 கட்டு - பாலக்கீரை
- 1/4 டீஸ்பூன் - மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் - பெருங்காய தூள்
- 1/4 கப் - தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் - கடுகு உளுந்தம்பருப்பு
- உப்பு
- 1 டேபிள்ஸ்பூன் - எண்ணெய்
தேவையான சமையல் உபகரணங்கள்
- பாத்திரம் (கீரை வேக)
- மிக்ஸி ஜார்
- கடாய்
- கரண்டி
செய்முறை :
- கீரை வேகவைக்க:
- முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் சுத்தம் செய்த பாலக்கீரையை போடுங்க.
- அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது பெருங்காய தூளை சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நடுத்தர சேமியில் கீரை நன்கு வெந்து நுரை பிடிக்கும் வரை வேகவைக்கவும்.
- அரைத்தல்:
- வெந்துருச்சுன்னா, கீரையை சிறிது சூடு குறைந்ததும் மிக்ஸி ஜாரில் போடுங்க.
- அதோட சேர்த்து துருவிய தேங்காய் மற்றும் பச்சை மிளகாயையும் சேர்க்கவும்.அதோட சேர்த்து துருவிய தேங்காய் மற்றும் பச்சை மிளகாயையும் சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் கொர கொரப்பாக (மிதமான திடமாக) அரைத்து வைக்கவும். (அதிகமாக மையமாக அரைக்க தேவையில்லை.)
- தாளிப்பு செய்ய:
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக விடவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொருஞ்சதும் (வெடிக்குற சத்தம் வரும்) மொஞ்சமா உப்பும் சேர்க்கலாம்.
- மசியலை வதக்குதல்:
- இப்போது, தாளித்த எண்ணெயில் நம்ம அரச்சு வச்சு இருக்க பாலக்கீரை விழுதை சேர்க்கவும்.
- சிறிய மிதமான சூட்டுல அத நல்லா கலக்கி வதக்க ஆரம்பிக்கவும்.
- கீரை விழுது அடிமட்டம் ஒட்டாமல் கெட்டியாகி வாசனை வரும்வரை வதக்கவும்.
- தேவையான அளவிற்கு நீர் குறைந்து, நல்ல சுருண்டு வந்தாலே சூப்பரான பாலக்கீரை மசியல் தயார்!
பரிமாறும் முறை:
- இதை வெறும் சாதத்தோடு அல்லது சாம்பார் சாதத்தோடு சேர்த்துக்கொண்டு சாப்பிட்டா அதிரடி சுவை இருக்கும்! சிறிய குழந்தைகளுக்கும் இது நல்ல ஆரோக்கியமான உணவாகும்.
- பக்கத்துடன் உருளைக்கிழங்கு பொரியல் அல்லது வத்தக்குழம்பு இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.
குறிப்பு:
- பாலக்கீரையை கழுவும் போது 2–3 முறை நன்றாக தண்ணீரில் அலசி கழுவுங்கள், மண் சேர்ந்திருப்பது தவிர்க்கலாம்.
- பச்சை மிளகாய் அளவ குறைக்கவோ/கூட்டிகவோ செய்யலாம்.
- தேங்காய் சேர்ப்பது சுவைக்கு மேலும் richness கொடுக்கும்; தேவைப்பட்டால் சிறிது சோம்பும் சேர்க்கலாம்.
- மிக்ஸியில் அரைக்கும் போது மிக மையமாக இல்லாமல் கொர கொரப்பாக இருக்கானு பார்த்துக்கோங்க.
- அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம், இல்லையெனில் மசியல் கெட்டியாக வராது.
சுவையான, எளிய மற்றும் உடல் நலத்திற்கு மிகுந்த பயனுள்ள பாலக்கீரை மசியல் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். இதில் உள்ள பாலக்கீரை இரும்புச்சத்து, விதவிதமான விட்டமின்கள் நிறைந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக இது இருக்கும். ஒரு தடவையாவது நீங்க இது செஞ்சிங்கனா கண்டிப்பா family members ரொம்ப happy ஆ சாப்பிடுவாங்க!
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment