பிரஷர் குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி - Pressure Cooker Chicken Biryani seivathu epdi
பிரஷர் குக்கரில் ஈசியாக ருசியான பிரியாணி செய்யலாம்,நீங்களும் உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்க உங்கள் வீட்டில் அனைவரும் இனி விரும்பி உண்பார்கள்
Pressure cooker biriyani seivathu மிகவும் எளிமையானது ,மென்மையான பிரியாணி அரிசிக்கு சீரக சம்பா அரிசியை பயன்படுத்துங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடம்
சேவைகள்
6 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- சீரக சம்பா - 1/2 சீரக சம்பா அரிசிக்கு ,தண்ணீரின் அளவு 2 கப் ஆக இருக்க வேண்டும்.
- சிக்கன் - 1/2 கிலோ சிக்கன் (சிக்கன் பிரியாணி ஸ்கின்லெஸ் சிக்கன் பயன்படுத்தவும்)
- கச கசா - 1/2
- இலவங்கப்பட்டை சிறிய அளவு
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
- அண்ணாச்சி பூ - 1
- தனி மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
- மல்லி தூள் -1 தேக்கரண்டி
- கரம் மசாலா -1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
- பச்சைமிளகாய் - 1
- நல்லெண்ணெய் - 100 கிராம்
- பெரியவெங்காயம் - 2(நீளவாக்கில் வெட்டி இருக்க வேண்டும்)
- தக்காளி - 2
- இஞ்சி (சிறிய துண்டு)
- 10 பல் பூண்டு
- புதினா, கொத்தமல்லி
- தயிர் -2 தேக்கரண்டி
செய்முறை :
- சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணிரை வடித்து எடுத்து கொள்ளவும்.சீரக சம்பா அரிசியையும் இரண்டு முறை கழுவி வைத்து கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை பட்டை ஏலக்காய் கிராம்பு கடற்பாசி அண்ணாச்சி பூ மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அடுத்து நீளமாக வெட்டிய பெரிய வெங்காயத்தையும் தக்காளியும் போட்டு வதக்கி பின் புதினா கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்
- சோம்பு, கச கசா, இஞ்சி பூண்டு சேர்த்த விழுதை சேர்த்து நன்கு பச்சை வாடை போகும் வரை வதக்கியதும், தனி மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
- வதக்கியதும் சிக்கன் துண்டுகளை செய்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கூடவே தயிர் நன்கு 1 நிமிடம் வதக்கவும்.
- பின் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விதத்தில் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அரிசியை அதனுடன் சேர்த்து கூடவே நெய் சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் உப்பு சேர்த்து குக்கரை மூடவும் 10நிமிடம் வேக வைத்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
- suvaiyanaa Pressure cooker biriyani ready
சுருக்கமாக செய்முறை
முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு அதனுடன் ஏலக்காய் அண்ணாச்சி பூ பிரியாணி இலை பட்டை கிராம்பு கடற்பாசி பச்சை மிளகாய் போன்றவரை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்தவுடன் நறுக்கிய வெங்காயத்தையும் தக்காளியையும் போட்டு வதக்கவும்
அதனுடன் புதினா கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும் பிறகு இஞ்சி பூண்டு அதனுடன் கச கசா மற்றும் சோம்பு சேர்த்த விழுதையும் கலந்து விட்ட பின்பு மிளகாய் தூள் கரி மசாலா மல்லி தூள் சேர்த்து அதன் பின் தயிர் கலந்து பிறகு 1/2 கிலோ சிக்கனை உடன் சேர்த்து தேவையான அளவு உப்பையும் தண்ணிரையும் கலந்து 1நிமிடம் கொத்திததன் பின்பு 1/2 கிலோ சீரக சம்பா அரிசியை சேர்த்து விட்டது குக்கரை மூடி போட்டு ஒரு 10 நிமிடம் கழித்து
அடுப்பை அணைத்து விசில் அடங்கியதும் குக்கரை திறந்தால் சுவையான ருசியான சிக்கன் பிரியாணி ரெடி.
குறிப்புகள்
- மென்மையான மற்றும் பஞ்சு போல பிரியாணிக்கு உயர்தர சீரக சம்பா அரிசிய பயன்படுத்துங்க.
- உங்கள் சுவைக்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா அளவை சரி பண்ணிக்கலாம்.
- வெஜிடபிள் பிரியாணிகு சிக்கனுக்கு பதிலா நறுக்கிய கேரட், பீன்ஸ் அல்லது பட்டாணியைச் சேர்க்கவும்.
Add a Comment