முருங்கை கீரை பொடி உருளைக்கிழங்கு வறுவல் – ருசியோ ருசி!
முருங்கை கீரை பொடி சேர்த்து செய்யும் உருளைக்கிழங்கு வறுவல் சுவையோ சுவை! இது சாதமானாலும், சப்பாத்திகூடவும் சூப்பராக இருக்கும். ஹெல்தியாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்டில் ஒருமுறை செய்து பாருங்க!
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சேவைகள்
3-4 நபர்
தேவையான பொருட்கள்:
- முருங்கை கீரை – 1 கப்
- உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
- பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
- பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
- எள் – 1 டேபிள்ஸ்பூன்
- சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
- காஞ்ச மிளகாய் – 2
- வறுவலுக்கு:
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- உளுந்து – 1/2 டீஸ்பூன்
- கருவேப்பில்லை – 1 கொத்து
- உருளைக்கிழங்கு – 2 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 4 (நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
தேவையான சமையல் உபகரணங்கள்
- மிக்ஸி
- கடாய்
- கரண்டி
செய்முறை :
- Step 1: முருங்கை கீரை பொடி தயாரித்தல் ஒரு வாணலியில உளுந்து, பாசிப்பருப்பு, எள், சீரகம், காஞ்ச மிளகாய் சேர்த்து பொன்னிறமா வறுத்துகோங்க. வறுத்ததும் வெறுமனே ஆறவிட்டு, முருங்கை கீரையுடன் மிக்ஸியில் பொடி செய்யவும்.
- Step 2: உருளைக்கிழங்கு வறுவல் செய்ய கடாயில் எண்ணெய் ஊத்தி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பில்லை சேர்க்கவும். நறுக்கிய பூண்டு சேர்த்து நல்லா வதக்கிகோங்க. பொடியாக நறுக்குன உருளைக்கிழங்கு சேத்து, தேவையான அளவு உப்பு சேத்து வறுக்கவனும். உருளைக்கிழங்கு நல்லா வேந்ததும், மேல முருங்கை கீரை பொடி தூவி, 2 நிமிசம் நல்லா கிளறி இறக்கனும்.
பரிமாறும் முறை:
- சாதத்தோடு சிறந்த இணைப்பு!
- சப்பாத்தி, தோசையுடனும் சூப்பர்!
- லஞ்ச் பாக்ஸ்க்கு அருமையான விருப்பம்!
குறிப்பு:
- ✔️ முருங்கை கீரை பொடியை பெரியளவில் செய்து எப்போதும் ஸ்டோரில் வைத்துக்கொள்ளலாம்.
- ✔️ உருளைக்கிழங்கை நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் வறுவல் கிரிஸ்பியாக இருக்கும்.
- ✔️ உப்பு சேர்த்ததும் லோ ஃபிளேமில் வேக வைத்தால் உருளைக்கிழங்கு மென்மையாகும்.
- இந்த சுவையான மற்றும் ஹெல்தியான "முருங்கை கீரை பொடி உருளைக்கிழங்கு வறுவல்" கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்க! எப்படி இருந்துச்சு என்று கமெண்ட்ல சொல்லங்க!
Add a Comment