வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி - Chicken chettinad gravy recipe in Tamil
பிரமாதமான செட்டிநாடு சிக்கன் ரெசிபி செய்யலமா?செட்டிநாடு சிக்கணு சொன்னதுமே அட நமக்கு பிடிச்ச ரெசிபி ஆச்சேனு தோனும் ஏன்னு கேட்டிங்கனா அதுல இருக்குற தேங்காய், மசாலா எல்லாமே மிக்ஸ் பண்ணி அரச்சு போட்டு சிக்கன சமைப்பாங்க.அந்த சிக்கன நம்ம எப்படி பண்ணலாம்னு பார்க்கப்போறோம்.நல்லா காரசாரமா சாப்பிட ஆசையா இந்த செய்முறைய செஞ்சு பாருங்க மறக்கவே மாட்டிங்க.
தயாரிப்பு நேரம்
1-1.5 மணி நேரம்
சேவைகள்
6 -8 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- சிக்கன் -1 கிலோ
- துருவிய தேங்காய் -1/2 முடி
- வெங்காயம் - 3
- தக்காளி - 4
- காஞ்ச மிளகாய் - 10 -15
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- மல்லி - 3/4 டீஸ்பூன்
- இலவங்கம் -1/2 துண்டு
- கிராம்பு - 3
- பிரியாணி இலை - 1
- கல்பாசி - சிறிய அளவு
- சோம்பு - 3/4 தேக்கரண்டி
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
- தனியா தூள் - 3/4 தேக்கரண்டி
- உப்பு , கறிவேப்பிலை , கொத்தமல்லி- தேவைப்படும் அளவு
தேவைப்படும் பத்திரங்கள்
- 1 மண் சட்டி
- 1 கரண்டி
செய்முறை :
- அடுப்பில் மண் சட்டி வச்சு எண்ணெய் ஊத்திகோங்க ,சோம்பு 1/2 தேக்கரண்டி போட்டு.
- அடுத்து மிளகு,சீரகம் முழு கறமசாலா, காஞ்ச மிளகாய் அதுக்கு அப்பறம் மல்லி, கல்பாசி, அடுத்து கறிவேப்பிலை போட்டுகோங்க.
- துருவி வச்சு இருக்க தேங்காய் போட்டு நல்ல பொன்னிறமாக வறுத்துட்டு அடுப்பை அணைச்சுட்டு அத ஒரு சின்ன தட்ல மாத்திக்க
- சூடு ஆறினதும் மிக்ஸி போட்டு தேவையான அளவு தண்ணீ ஊத்தி நல்லா நுண்ணமா அரச்சு எடுத்துக்கணும்.
- மண் சட்டில கொஞ்சம் எண்ணெய்,அதுக்கு அப்பறம் சோம்பு பட்டை, இலவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- நறுக்கி வச்சு இருக்க வெங்காயம், கறிவேப்பிலை இதலாம் போட்ட பிறகு நல்ல பொன்னிறமா வெங்காயத்தை வதக்கி எடுத்துக்கோங்க.
- இது கூடவே 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நல்ல வதக்கியதும் தக்காளி,மஞ்சள் தூள் உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் நல்லா வதக்கணும்.
- வதக்கி முடுச்ச பிறகு தண்ணீ கொஞ்சம் ஊத்தி நல்லா கொதிக்கவிடுங்க,
- பிறகு நறுக்கி வச்சு இருக்க சிக்கன போட்டுகோனும்.எல்லாமே போட்டு வதக்கி முடிச்ச பிறகு அதுக்கு மேலேயே கொஞ்சம் கொத்தமல்லியும் போட்டுக்கணும்.
- இதுக்கு அப்பறம் அரச்சு வச்சு இருக்க விழுத இதுல ஊதிக்கணும்.
- இப்ப இந்த விழுதோட, சிக்கன்,மசாலா எல்லாத்தையும் நல்ல மிக்ஸி பண்ணுங்க தேவையான அளவு கொஞ்சம் தண்ணீ ஊத்தி நல்லா கொதிக்க விட்டு மூடி போட்டு மூடவும்.
- நல்ல கொதுச்சு வந்ததும் அதுமேல கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு கொஞ்சமா நல்ல எண்ணெய் ஊத்தி நல்லா கிளறி விட்டு அப்படியே சுட சுட சாதத்துல போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
- இந்த ரெசிபிய மதிய சாப்பாட்டுக்கு பண்ணினாலும் இதே கிரெவிய இரவு தோசயோடு சாப்பிட்டால் ரொம்ப பிரமாதமா இருக்கும்.
குறிப்புகள்
- கல்பாசி இந்த செட்டிநாடு சிக்கனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் மறந்துடாதீங்க.
- கறிவேப்பிலை,காஞ்ச மிளகாய் கொஞ்சம் அதிகமாகவே போட்டுகலாம்.அதுக்கு பதிலாக தனி மிளகாய் தூளை குறைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி பூண்டு விழுதை போட்ட பிறகு ஒரு 2 நிமிடம் கழிச்சு தக்காளி போடுங்க
- தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் சரி சமமாக எடுத்து கொள்ளுங்க.
- சிக்கனை போட்டது தண்ணீர் ஊத்த கூடாது.
Add a Comment