ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்
மழை பெய்யும் போது நல்லா சுடசுட ருசியா ஏதாவது சாப்பிடணும்னு தோணும் போது பிரெஞ்சு பிரைஷ் ஒரு பெஸ்ட் சாய்ஸ். என்னதான் கடைல பிரெஞ்சு பிரைஷ் வாங்கி சாப்பிட்டாலும், கொஞ்சமா தான் சாப்பிட முடியும். அதுவே அத நாம வீட்டுல செஞ்சு சாப்பிடா எவ்ளோ வேண்டுமானாலும் சாப்பிடலாம் இல்லையா? நெறய பேருக்கு கடைல விக்கிற பிரெஞ்சு பிரைஷ் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும்.அதும் உருளைக்கிழங்கு பிரியரா இருந்தா கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்னு நினைப்பாங்க.இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப உதவிய இருக்கும், இதை படுச்சு செஞ்சு பார்த்து எப்படி இருந்ததுன்னு உங்க எஸ்பிரிஎன்ஸ ஷேர் பண்ணுங்க. வாங்க எப்படி சூப்பர கடைல கிடைக்குற பிரெஞ்சு பிரைஷ் மாதிரியே வீட்டுலயே எப்படி பண்ணலாம்னு பாக்கலாம்.
தயாரிப்பு நேரம்
30 நிமிடம்
சேவைகள்
4 நபர்
தேவையான பொருட்கள்:
- 2-3 -உருளைக்கிழங்கு
- 1/2 டீஸ்பூன் - உப்பு
- தேவையான அளவு - எண்ணெய்
- 1/4 டீஸ்பூன் - மிளகு தூள் (விருப்பத்திற்கு ஏற்ப)
தேவையான சமையல் உபகரணங்கள்
- பெரிய கிண்ணம்
- கத்தி
- பெரிய பானை
- கடாய்
செய்முறை :
- உருளைக்கிழங்க எடுத்து அதோட தோல உருச்சு, நீளமா கம்பிமாதிரி நருகிகணும்.
- அத தண்ணில கழுவி, நல்லா சூடான தண்ணீல போட்டு தனியா எடுத்து துணியில போட்டு நல்லா துடச்சுகணும்,
- ஒரு ஆழமான கடாயில எண்ணெய் ஊத்தி .
- உருளைக்கிழங்குக எண்ணெய்யில் போட்டு, பொன்னிறமா வர வரைக்கும் (3-4 நிமிடங்கள்) வறுக்கவும்
- பிரெஞ்ச் ஃப்ரைஸ எண்ணெய்யிலிருந்து எடுத்து, உப்பு, மிளகு தூள் போட்டு கொஞ்சமா கலக்கிகணும்
- சூடான பிரெஞ்ச் ஃப்ரைஸ அப்படியே தக்காளி சாஸ் கூட வச்சு பரிமாருங்க
பரிமாறும் முறை:
- ஒரு தட்டு எடுத்துகொங்க அதுக்கு நாட்டுல ஒரு சின்ன கிண்ணி வச்சு அதுல தக்காளி சாஸ ஊத்திக்கோங்க
- இப்போ அந்த கிண்ணியா சுத்தி பிரெஞ்சு பிரைஷ ரவுண்ட அடுக்கி வச்சு பரிமாறுனா பாக்குறதுக்கும் சாப்ரதுக்கு ரொம்பவே நல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க
குறிப்பு:
- உருளைக்கிழங்கு நல்லா மொறுமொறுப்பா இருக்கணும்னா ஊற வச்ச உருளைக்கிழங்க 2-3 டிஸ்யூ பேப்பர்ல போட்டு ஈரப்பதம் போனதும் பொறிக்கணும்
- அதிகமா பிரெஞ்சு பிரைஷ் செய்யும் போது அடுப்ப மீடியம் பிளேம் ல வச்சு பொறுச்சு எடுத்துட்டு அடுத்து பரிமாறும் போது திரும்பவும் போட்டு பொறுச்சுக்கலாம்.
Add a Comment