பொடி உருளைக்கிழங்கு :
இந்த கேரளா ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு ரெசிபி ஒரு சுவையான மற்றும் ஈஸியான சைட் டிஷ் ஆகும். இது ரசம் சாதம், தோசை, சப்பாத்தி மற்றும் அனைத்து வகையான கலவை சாதத்துக்கும் வச்சு சாப்பிடா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.
தென்னிந்திய சமையல்ல குறிப்பா கேரளால, சின்ன உருளைக்கிழங்கு நெறயா உணவுகலுல ஒரு முக்கிய இடத்த பிடுச்சுருக்குது. இந்த சிறிய உருளைக்கிழங்குங்க , அதோட தனித்துவமான சுவை மற்றும் சத்தான தன்மைக்காக அறியப்படுது. கேரள ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு வறுவல் என்பது ஒரு பாரம்பரிய உணவு முறையாகும், இது எளிமையான சமையல் முறையைப் பயன்படுத்தி, ஆனால் சுவையில் மிகவும் நிறைவாக இருக்கும். இந்த வறுவல், பல்வேறு மசாலாப் பொருட்களுடன் உருளைக்கிழங்கை வறுத்து எடுக்கப்படுகிறது, இது ஒரு அற்புதமான சுவை மற்றும் மணத்தை உருவாக்குகிறது.
இந்த ரெசிபி, குறிப்பாக ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற தென்னிந்திய உணவுகளுடன் சேர்த்து பரிமாறப்படும்போது, உணவின் சுவையை மேலும் மேம்படுத்துகிறது. மேலும், இது தோசை, சப்பாத்தி போன்ற காலை உணவு வகைகளுடன் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது. இந்த ரெசிபி, சத்தான மற்றும் சுவையான ஒரு பக்க உணவாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
இந்த கேரள ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி, சமையல் beginners கூட எளிதாக முயற்சி செய்யக்கூடிய ஒன்று. இந்த ரெசிபியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிதாக கிடைக்கக்கூடியவை, மேலும் சமைக்கும் முறை மிகவும் நேரடியானது. இந்த ரெசிபியைப் பின்பற்றி, உங்கள் வீட்டில் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பக்க உணவை நீங்கள் எளிதாக தயார் செய்யலாம்.
இந்த ரெசிபி, உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சேவைகள்
4 நபர்
தேவையான பொருட்கள்:
- பொடி (சின்ன)- உருளைக்கிழங்கு -1/2 கிலோ
- உளுந்தம் பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
- மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
- சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
- மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
- கஞ்சா மிளகாய் - 5
- தண்ணீ
- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
தேவையான சமையல் உபகரணங்கள்
- குக்கர் -உருளைக்கிங்க வேக வைக்கிறதுக்கு
- தட்டு - உருளைக்கிழங்கு தோல உரிக்க
- கடாய் -மசாலா பொருட்கள வறுக்குறதுக்கு
- மிக்ஸி - மசாலா பொருட்கள பொடியா அரைக்க
- கரண்டி - வறுக்குறதுக்கும், கிளறுறதுக்கும்
- கிண்ணம் - பொடி உருளைக்கிழங்கு டிஷ்ஷ பரிமாறுறதுக்கு
செய்முறை :
- குக்கர்ல சின்ன உருளைக்கிழங்க போட்டு அது மூல்குற அளவுக்கு தண்ணீ ஊத்தி ஒரு 2 இல்ல 3 விசில் விட்டு வேக வச்சுக்கோங்க.
- வேக வச்ச சின்ன உருளைக்கிழங்கோட தோல உரிச்சு ஒரு தட்டுல எடுத்து வச்சுக்கோங்க.
- கடாய அடுப்புல வச்சு கடாய் சூடானதும் உளுந்தம் பருப்பு போட்டுக்கலாம், உளுந்தம் பருப்பு கொஞ்சம் பொன்னிரமா மாறுற வந்ததும்.
- கடலை பருப்ப அதுகூட சேத்து வறுக்கணும், பாத்து வறுக்கணும் கருக்காம
- அடுத்து மல்லி, சீரகம், மிளகு எல்லாத்தையும் அடுத்து அடுத்து சேத்துக்கோங்க
- எல்லாத்தையும் நல்லா வறுத்துக்கோங்க கருக்க விட்ரக்கூடாது.
- இப்போ வருத்தத ஒரு தட்டுல போட்டு ஆறாவச்சுக்கணும்.
- நம்ம வறுத்து வச்சு இருக்க மசாலா கலவைய மிக்ஸியில போட்டு நல்லா அரைச்சுக்கனும், ரொம்ப பொடியா அரைச்சுடக்கூடாது கொஞ்சம் கொர கொறப்பா அரைச்சுக்கோங்க.
- திரும்பி கடாய அடுப்புல வச்சு எண்ணெய் சேத்து எண்ணெய் கஞ்சதும் அதுல நம்ம தட்டுல தோல உரிச்சு வச்சு இருக்க சின்ன உருளைக்கிழங்க சேத்துக்கணும்.
- உருளைக்கிழங்க எண்ணைல போட்டு ஒரு ரெண்டு கிண்டு கிண்டி அடுத்து அதுக்கு மேல நம்ம அரச்சு வச்சு இருக்க மசாலாவ போட்டு நல்லா கிளறி விட்டுக்கணும்.
- கொஞ்சமா தேவையான அளவு உப்பு சேத்து ரெண்டு பெறட்டும் பெறட்டுனா சின்ன உருளைக்கிழங்கு ரெசிபி ரெடி ஆயிடும்.
- இந்த கேரளா ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு ரெசிபிய ரசம் சாதம், தோச, சப்பாத்தி, எல்லா விதமான கலவை சாதத்தோடயும் வச்சு நல்லா சைடு டிஷா வச்சு குழச்சு அடிக்கலாம்.
பரிமாறும் முறை:
- இந்த ரெசிபிய சூடா பரிமாறவும்.
- நீங்கள் விருப்பட்டா , கொத்தமல்லி தழைய வச்சு டெகரேட் பண்ணலாம்.
- இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குறிப்பு:
- உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது, அது அதிகமாக வேகாம பார்த்துக் கொள்ளவும்.
- மசாலா வறுக்கும் போது, தீய மிதமான சூட்டுல வைக்கவும்.
- நீங்கள் விருப்பப்பட்டா, இந்த ரெசிபியில இஞ்சி மற்றும் பூண்டு சேக்கலாம்.
- இந்த ரெசிபியில, நீங்கள் விரும்புற எந்த காய்கறிங்க வேணாலும் சேத்துக்கலாம்.
- இந்த ரெசிபி நீங்களும் ட்ரை பண்ணி உங்க பேமிலிய அசத்துங்க உங்களுக்கு ஃப்ரெசுக்கும் ஷேர் பண்ணி விடுங்க.
Add a Comment