பூண்டு ஊறுக்காய் வீட்டில் சுலபமாக செய்வது எப்படி- how to make garlic pickle recipe in tamil
காரமான பூண்டு ஊறுகாய்: விரைவான மற்றும் எளிதான செய்முறை. பூண்டு காரமான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள குடுக்கும், இது சுவையாவும் எளிமையாகவும் விரைவாகவும் பண்ணலாம் , மேலும் ஒரு சுவையான ஊறுகாயை அளிக்கிறது,
தயாரிப்பு நேரம்
30-40 நிமிடம்
சேவைகள்
4-6 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் கடுகு
- 1ஸ்பூன் வெந்தயம்
- 100கிராம் எண்ணெய்
- 20 -30- பல் பூண்டு
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 ஸ்பூன் மல்லி தூள்
- புளி நெல்லிக்காய் அளவு
- தேவையான அளவு உப்பு
- வெல்லம் சின்ன துண்டு
தேவைப்படும் பத்திரங்கள்
- ஒரு கடாய்
- ஒரு கரண்டி
- கண்ணாடி பாட்டில் (பிக்கில் ஸ்டார் பண்ணுறதுக்கு )
செய்முறை :
- 1/2 ஸ்பூன் வெந்தயம்,கடுகு வருத்து பொடி பண்ணி வச்சுகிட்டு.
- கடாயில எண்ணெய் சேத்து 1/2 ஸ்பூன் கடுகு,வெந்தயம் போட்டு தாளிச்சி, உருச்ச பூண்டு போட்டுட்டு.
- மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,மல்லி தூளும் சேர்த்துக்கலாம் அப்போதா திக்னஸ் குடுக்கும்
- இதுகூடவே சின்ன நெல்லிக்காய் அளவு புளிய திக்கா கரச்சு சேர்த்துக்கிட்டு தேவையான அளவு உப்பு கூடவே நம்ம பொடி பண்ணிவச்ச தூள், 5,6 பல் பூண்ட அரச்சும் இதுல சேர்த்துக்கலாம்.
- அவ்ளோதான் கொஞ்சம் நேரம் கொதிக்க வச்சுட்டா பூண்டு ஊறுகாய் ரெடியாடுச்சு கடைசியா ஒரு சின்ன துண்டு வெல்லம் சேத்துகணும்.
- பூண்டு ஊறுகாக்கு இனிப்பு சேர்த்தா சூப்பரா இருக்கும்.
குறிப்புகள்
- சுவைக்காக, நீங்க மிளகாய் பொடியின் அளவ அதிகம் சேர்த்துக்கலாம்.
- சுவை ஏற்ப உப்பு மற்றும் வெல்லத்தோட அளவ சரிசென்ச்சுகலாம்
- ஊறுகாயை காத்து போகாத டப்பால வைச்சு க
- ஃப்ரிட்ஜ் வைச்சு ரொம்ப நாள் சேமிச்சுக்களாம்
Add a Comment