குக்கரில் காளான் பிரியாணி செய்வது எப்படி?
உங்களுக்கும் பிரியாணி பிடிக்குமா? பிரியாணியில் பல வகை பிரியாணி இருக்கிறது அதிலும் காளான் பிரியாணி மிகவும் கூடுதல் சுவையானது. குறிப்பாக புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட முடியாத நிலையில் நமக்கு கை கொடுப்பது இந்த காளான் தான். காளான் பிரியாணியை கீழே கொடுக்கபட்டுள்ளவாரு உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து உண்பார்கள்.
தயாரிப்பு நேரம்
30 நிமிடம்
சேவைகள்
4 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- காளான் (1/2 கிலோ)
- பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா (250 கிராம்)
- பெருஞ்சீரகம்(1/2 டீஸ்பூன்)
- இலவங்கப்பட்டை( 1/2 குச்சி)
- கிராம்பு (2)
- ஏலக்காய்(1)
- நெய் அல்லது எண்ணெய்(100கிராம்)
- வெங்காயம்( 2 நீளமாக வெட்டியது)
- தக்காளி( 2 பொடியாக வெட்டியது)
- இஞ்சி பூண்டு விழுது (2 டீஸ்பூன்)
- புதினா கொத்தமல்லி( ஒரு கைப்பிடி அளவு)
- தனி மிளகாய் தூள் (1/2 டீஸ்பூன் )
- கரம் மசாலத்தூள் (1டீஸ்பூன்)
- மல்லித்தூள் (1/2டீஸ்பூன்)
- தண்ணீர் (1பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர்)
தேவையான பாத்திரம் :
- 3 லிட்டர் குக்கர்
- கரண்டி
செய்முறை :
- முதல அந்த 3 லிட்டர் குக்கரை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊத்துங்க. நாம பயன்படுத்துற எண்ணெய் ரீஃபெயிடு ஆயிலுக்கு பதிலாக செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெயாக இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- அதுக்கு அப்பறம் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
- அடுத்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு பொன்னிரமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்,பின் அலசிய காளான் மற்றும் புதினா கொத்தமல்லியும் அதனுடன் சேர்த்து வதக்கவும்
- பின் தனி மிளகாய்தூள் மல்லி தூள் கரம் மசாலா போட்டு நன்கு கிளறவும் தீயை மிதமான சுட்டில்வைத்து
- பிறகு தண்ணீர் அல்லது தேங்காய்பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து கிளறி விட்டதும் குக்கரை விசில் போட்டு மூடவும். இரண்டு விசில் வந்ததும் குக்கரை இறக்கி விசில் அடங்கியதும் சூடான சுவையான காளான் பிரியாணி ரெடி.
பரிமாறும் முறை:
- ஒரு கப் நிறைய காளான் பிரியாணியை போட்டு
- ஓர் தட்டில் அதனை கவுத்தி எடுத்துவிட்டு
- அதன் மேல் சிறிது கொத்தமல்லியை தூவி விடவும்.
- அருகில் வட்டமாக நறுக்கிய வெங்காயத்தயும் வைக்கவும்.
- பார்ப்பதற்கும் சுவைபதற்கும் அருமையாக இருக்கும்.
குறிப்பு:
- காளானை விருப்பத்திற்கு ஏற்ப சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.
- பிரியாணியை குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வரை தம் போடலாம்.
- இந்த பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்
Add a Comment