இறால் நெய் ரோஸ்ட் (Prawn Ghee Roast)
இறால் நெய் ரோஸ்ட் தென்னிந்தியாவில மங்களூர்யோட பேமஸ் டிஷ்ல இருந்து வரும் ஒரு காரமான மற்றும் சுவையான டிஷ் . இறால நெய்யில (clarified butter) வறுத்து நறுமணமான மசாலா விழுதுல சமைக்குறதான் மூலம் இது தயாரிக்கப்படுது. இந்த டிஷ் அதோட நிறம், வாசனை மற்றும் மசாலா, புளிப்பு மற்றும் இனிப்பு எல்லாத்தோட சரியான சமநிலையால வகைப்படுத்தப்படுது.
ஒரு நல்ல இறால் நெய் ரோஸ்ட்டின் கீ மசாலாயோட விழுதுல இருக்கு, இது பொதுவா காஞ்ச சிவப்பு மிளகா, கொத்தமல்லி விதை, சீரகம் , வெந்தயம் , கடுகு , மிளகுத்தூள், பூண்டு, இஞ்சி மற்றும் புளி ஆகியவற்றோட கலவையுடன் தயாரிக்கப்படுது. இறால் இந்த விழுதில் ஊறவைக்கப்படுது, பின்னர் அவை மென்மையாகும் வரை மற்றும் மசாலாப் பொருட்களால தடவபட்டு நெய்யில குக் பண்றோம் . இந்த உணவு பெரும்பாலும் கறிவேப்பிலை அலங்கரிக்கப்பட்டு சூடான சாதம் இல்ல நெய் தோச சப்பாத்தியோட பரிமாறலாம்.
இறால் நெய் ரோஸ்ட் மங்களூரில பேமஷான டிஷ். பெரும்பாலும் பேமிலி ஃபங்சன் மற்றும் ஃபெஷ்டிவல்ஷ்ல பரிமாறப்படுது. இது இந்தியா முழுதும் உள்ள ஹோட்டல் மற்றும் வீட்டுக்களுல பிரபலமான டிஷ்ஷாகும். நீங்க காரமான சீ ஃபுடோட ரசிகரா இருந்தா, நீங்க இறால் நெய் ரோஸ்ட ட்ரை பண்ணி பாக்கணும். இதோட டேஸ்ட் உங்கல கவரும் மற்றும் இன்னும் சாப்பிடனும்னு தூண்டும்.
தயாரிப்பு நேரம்
35-45 நிமிடம்
சேவைகள்
4 நபர்
தேவையான பொருட்கள்:
-
வெங்காய விழுதுக்கு:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2 (சிறிய வெங்காயம் 10)
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது மிளகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 (வதக்கி விழுதாக அரைக்கவும்) - இறால் - 1/2 கிலோ
- உப்பு சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- நெய் - 3 டீஸ்பூன்
-
நெய் ரோஸ்ட்டுக்கு:
நெய் - 3 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு சுவைக்கேற்ப
வெங்காய விழுது - 1/2 கப்
வறுத்த இறால்
தண்ணீர் - 1/4 கப்
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய்
- சட்டி
- கலக்கும் கரண்டி
- கத்தி
- வெட்டு பலகை
- Grinder
- கிண்ணங்கள்
- அளக்கும் கரண்டிகள்
செய்முறை :
- வெங்காய விழுது: ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊத்துங்க. நறுக்கிய வெங்காயம் (2 பெரிசு அல்லது 10 சிறுசு), சோம்பு , சீரக , இஞ்சி-பூண்டு விழுது, மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக்கணும். வெங்காயம் பொன்னிறமா மாறுற வரைக்கும் வதக்கனும். கொஞ்சம் ஆற விடுங்க , பின்னர் சாப்டான விழுதா அரச்சுக்கனும்.
- இறால ஊறவைக்குறது : இறால சுத்தம் செஞ்சு நரம்ப நீக்கிடனும் (1/2 கிலோ). ஒரு கிண்ணத்தில, இறால உப்பு, மஞ்சள் தூள் (1/4 டீஸ்பூன்), மிளகாய் தூள் (1 டீஸ்பூன்) கூடவே இஞ்சி-பூண்டு விழுது (1 டீஸ்பூன்) சேத்துக்கணும். நல்லா கலந்து கொறஞ்சது 30 நிமிசம் ஊற வைக்கனும் (இல்ல முடிந்தால், அதிக நேரம்).
- இறால சமைக்குறது : ஒரு கடாயில 3 டீஸ்பூன் நெய் ஊத்தனும் . ஊறவச்ச இறால சேத்து, அது இளஞ்சிவப்பு நிறமா மாறி நல்லா குக் ஆகுற வரைக்கும் சமைக்கனும். அதிகமாக குக் ஆகிடாம பாத்துக்கோங்க , இறாலை கடாயிலிருந்து எடுத்து தனியா வச்சுக்கனும்.
- நெய் ரோஸ்ட் செய்றதுக்கு : அதே கடாயில, திரும்ப 3 டீஸ்பூன் நெய் சேத்துக்கனும். மிளகாய் தூள் (1 டீஸ்பூன்), மஞ்சள் தூள் (1/4 டீஸ்பூன்) மற்றும் கொத்தமல்லி தூள் (1 டீஸ்பூன்) சேத்துக்கனும். மசாலா கருகாம, ஸ்மெல் வர வரைக்கும் கொஞ்ச நேரம் வதக்கனும்.
- தயாரிச்ச வெங்காய விழுது (1/2 கப்) மற்றும் உப்பு சுவைக்கேற்ப சேர்த்துகனும். எண்ணெய் பிரிய ஆரம்பிச்சு , டார்க் நிறமா மாற்ற வரை விழுத வதக்கவனும். இது சுவைக்கு முக்கியம்.
- விழுது ஒட்டாமல் மற்றும் கருகாம இருக்க, 1/4 கப் தண்ணீரை கடாயில் சேருங்க. நல்லா கலக்குங்க.
- வறுத்த இறால திரும்ப கடாயில சேத்து , மசாலா விழுதுல நல்லா தடவுங்க.
- இறால் முழுசா தடவினதும் , கொஞ்சம் கெட்டியாகுற வர, சுமார் 2-3 நிமிசம் இன்னும் குக் பண்ணி , மெதுவாக கிண்டுங்க.
பரிமாறும் முறை:
- சுவையான இறால் ghee roast ஐ சூடாக பரிமாறவும்.
- சாதம், சப்பாத்தி, அல்லது naan உடன் பரிமாறலாம்.
- வெங்காய பச்சடி அல்லது தயிர் பச்சடி போன்ற சைட் டிஷ்களுடன் பரிமாறலாம்.
- கொத்தமல்லி தழையால் அலங்கரித்து பரிமாறலாம்.
குறிப்பு:
- இறால் நெய் ரோஸ்ட்டை சூடா நெய் தோச இல்லனா சப்பாத்தியோட பரிமாறலாம். விரும்பினா, கறிவேப்பிலை கொண்டு அலங்கரிக்கலாம்.