எளிதான உடனடி தக்காளி ஊறுகாய் ஒரு சுவையான மற்றும் எளிதான செய்முறை. Thakkali oorugai seivathu eppadi
தக்காளி ஊறுகாய் ஒரு சுவையான மற்றும் சுலபமா செய்யக்கூடிய இந்திய ஊறுகாய் ஆகும், thakali oorugai seivathu eppadi. இது அரிசி மற்றும் ரொட்டியுடன் வச்சு சாப்பிடலாம். இந்த செய்முறைய ஃபாலோ பண்ணுங்க எளிமையாவும் அதிக நேரம் எடுக்காது. தக்காளி ஊறுகாய் என்பது ஒரு பிரபலமானது. இது சாதம், இட்லி, தோசை, மற்றும் சிற்றுண்டி போன்ற பல்வேறு உணவுகளுக்கு ஒரு சுவையான துணை Thakkali Oorugai Recipe in Tamil
||
தயாரிப்பு நேரம்
30 நிமிடம்
சேவைகள்
8-10 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கிலோ தக்காளி
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 100 கிராம் நல்ல எண்ணெய்
- 6 ஸ்பூன் மிளகாய் தூள்
- நெல்லிக்காய் அளவு புளி தண்ணீ ஊத்தி பிழுஞ்சது.
- 10 பல் பூண்டு தட்டி எடுத்து
- 1/4 ஸ்பூன் பெருங்காயம் தூள்
- தேவையான அளவு உப்பு
- சிறிய கருவேப்பிலை
செய்முறை :
- ஒரு கடாயில நருக்குன தக்காளி,பிழிந்த புளி சேர்த்து தண்ணீ சேக்காம மிதமான சுட்டுலயே வதக்கிகோங்க.தக்காளி வெந்ததும் தண்ணில நல்லா வத்துணதும் இறக்கி ஆற வச்சுக்கோங்க.
- ஆருன தக்காளிய மிக்ஸில போட்டு நல்லா நைசா அரச்சுகோங்க.
- ஒரு கடாயில் கடுகு வெந்தயம், கறிவேப்பிலை தட்டுன பூண்டு போட்டு வதக்கி அத மிக்ஸில போட்டு பொடியக்கிகோங்க.
- இப்போ அந்த கடாயில எண்ணெய் ஊத்தி தக்காளி விழுது, அரச்ச பொடி, மிளகாய் தூள், பெருங்காய தூள், உப்பு போட்டு நல்லா கிளறி எண்ணெய் பிரியுற வர வதக்கனா தக்காளி ஊறுகாய் ரெடி ஆயிடும்.
- சுத்தமான கண்ணாடி பாத்திரத்தில ஊத்திஎண்ணெய் மேல வர மாதிரி ஊத்தி அடச்சு வச்சுடுங்க.
Suvaiyana thakkali oorugai ready
குறிப்புகள்
- தக்காளி ஊறுகாய் சில ஆரோக்கிய நன்மைகள குடுத்தாலும், சோடியம் அதிகமாக இருக்குறனால, அதை அளவா எடுத்துகுறது அவசியம்.
- தக்காளி ஊறுகாய் ரொம்ப நாள் கெட்டு போகாம இருக்க எண்ணெய் நல்லா மேல வர மாதிரி பாத்துகுறது முக்கியம்.
- தக்காளி ஊறுகாய்க்கு நல்ல தக்காளிய பயன்படுத்துங்க.
- மிளகாய் தூள உங்க சுவைக்குயேத்த மாதிரி கூட்டி கொரச்சுகளாம்.
- புளி சேக்குற அளவுக்கு உப்பு அளவ சரி பத்துகோங்க.