இந்த அம்மா ஸ்டைல் கோவக்காய் ரோஸ்ட் ருசிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் நல்லது. உங்க ஹஸ்பண்ட்கும், குழந்தைகளுக்கும் லஞ்ச் பாக்ஸ், அப்டி இல்லலையா ஒரு சாதாரண நாள் உணவுக்கே இது சூப்பரான சைடிஷ். ஒரு தடவ செஞ்சு பாருங்க – உங்க வீட்டுல ரொம்பவே பாப்புலரான ரெசிபியா ஆகிடும்!
பூண்டு இட்லி பொடி செய்வது எப்படி Poondu Idli In Tamil
பூண்டு இட்லி பொடி :
பூண்டு இட்லி பொடி என்பது தென்னிந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். இது இட்லி, தோசை போன்ற உணவுகளுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பூண்டு இட்லி பொடி எளிதில் செய்யக்கூடியது மற்றும் சத்தானதும் கூட. இந்த பொடியில் பூண்டு, பருப்பு வகைகள் மற்றும் பல்வேறு மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பூண்டு இட்லி பொடி பல நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
இந்த வலைப்பதிவில், பூண்டு இட்லி பொடி எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக காண்போம். இந்த செய்முறை மிகவும் எளிதானது மற்றும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பொடி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.
பூண்டு இட்லி பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை இப்போது பார்க்கலாம்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சேவைகள்
4 நபர்
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் - பூண்டு
- 1/4 -தேங்காய் துருவியது
- தேவையான அளவு -உப்பு
- காரத்துக்கு ஏற்ப -காய்ந்த மிளகாய்
- 2 டேபிள்ஸ்பூன் - எண்ணெய்
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய் அல்லது வாணலி (எண்ணெய் ஊற்றி வதக்க)
- கரண்டி (கிளறுவதற்கு)
- மிக்சி (பொடி அரைப்பதற்கு)
- காற்றுப்புகாத பாட்டில் (பொடியை சேமிப்பதற்கு)
செய்முறை :
- முதல ஒரு பாத்திரத்துல எண்ணெய் ஊத்தி சூடானதும், பூண்டு சேர்த்து 2 நிமிசத்துக்கு வதக்கிக்கணும்.
- பின்ன அதுகூட காய்ந்த மிளகாய் சேத்து வதக்குங்க
- இதுக்கு அடுத்து அடுப்ப ஆஃப் பண்ணிட்டு தேங்காய் சேத்து கிளறி ஆரவிட்ருங்க.
- இது நல்லா ஆறுனதும் மிளகாய் உப்பு, பூண்டு , தேங்காய் எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு நொறுநொறுப்பா அரைச்சு வச்சுக்கணும்.
- இப்போ நீங்க எதிர்பாத்த சூப்பரான சுவையான பூண்டு பொடி ரெடி.
- இத காத்து போகாம ஒரு பாட்டில போட்டு வச்ச ஒரு மாசத்துக்கு usefulla இருக்கும்.
பரிமாறும் முறை:
- பூண்டு இட்லி பொடியை இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற உணவுகளுடன் தொட்டு சாப்பிடலாம்.
- மேலும், சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் இது மிகவும் சுவையாக இருக்கும்
குறிப்பு:
- பூண்டை அதிகமாக வறுத்தால் பொடி கசப்பாகிவிடும்.
- விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் மற்றும் பருப்பு வகைகளின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.
- பொடியை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
- பொடி கெட்டியாக இருந்தால், சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலக்கலாம்.
- இந்த பொடியை சாதம், சப்பாத்தி போன்ற மற்ற உணவுகளுடன் கூட சாப்பிடலாம்.
- இட்லி பொடி செய்முறையை மேலும் எளிதாக்க, நீங்கள் இந்த குறிப்புகளைப் பின்பற்றலாம். இந்த பொடி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil
பொடி உருளைக்கிழங்கு :
இந்த கேரளா ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு ரெசிபி ஒரு சுவையான மற்றும் ஈஸியான சைட் டிஷ் ஆகும். இது ரசம் சாதம், தோசை, சப்பாத்தி மற்றும் அனைத்து வகையான கலவை சாதத்துக்கும் வச்சு சாப்பிடா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.
தென்னிந்திய சமையல்ல குறிப்பா கேரளால, சின்ன உருளைக்கிழங்கு நெறயா உணவுகலுல ஒரு முக்கிய இடத்த பிடுச்சுருக்குது. இந்த சிறிய உருளைக்கிழங்குங்க , அதோட தனித்துவமான சுவை மற்றும் சத்தான தன்மைக்காக அறியப்படுது. கேரள ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு வறுவல் என்பது ஒரு பாரம்பரிய உணவு முறையாகும், இது எளிமையான சமையல் முறையைப் பயன்படுத்தி, ஆனால் சுவையில் மிகவும் நிறைவாக இருக்கும். இந்த வறுவல், பல்வேறு மசாலாப் பொருட்களுடன் உருளைக்கிழங்கை வறுத்து எடுக்கப்படுகிறது, இது ஒரு அற்புதமான சுவை மற்றும் மணத்தை உருவாக்குகிறது.
இந்த ரெசிபி, குறிப்பாக ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற தென்னிந்திய உணவுகளுடன் சேர்த்து பரிமாறப்படும்போது, உணவின் சுவையை மேலும் மேம்படுத்துகிறது. மேலும், இது தோசை, சப்பாத்தி போன்ற காலை உணவு வகைகளுடன் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது. இந்த ரெசிபி, சத்தான மற்றும் சுவையான ஒரு பக்க உணவாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
இந்த கேரள ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி, சமையல் beginners கூட எளிதாக முயற்சி செய்யக்கூடிய ஒன்று. இந்த ரெசிபியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிதாக கிடைக்கக்கூடியவை, மேலும் சமைக்கும் முறை மிகவும் நேரடியானது. இந்த ரெசிபியைப் பின்பற்றி, உங்கள் வீட்டில் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பக்க உணவை நீங்கள் எளிதாக தயார் செய்யலாம்.
இந்த ரெசிபி, உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சேவைகள்
4 நபர்
தேவையான பொருட்கள்:
- பொடி (சின்ன)- உருளைக்கிழங்கு -1/2 கிலோ
- உளுந்தம் பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
- மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
- சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
- மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
- கஞ்சா மிளகாய் - 5
- தண்ணீ
- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
தேவையான சமையல் உபகரணங்கள்
- குக்கர் -உருளைக்கிங்க வேக வைக்கிறதுக்கு
- தட்டு - உருளைக்கிழங்கு தோல உரிக்க
- கடாய் -மசாலா பொருட்கள வறுக்குறதுக்கு
- மிக்ஸி - மசாலா பொருட்கள பொடியா அரைக்க
- கரண்டி - வறுக்குறதுக்கும், கிளறுறதுக்கும்
- கிண்ணம் - பொடி உருளைக்கிழங்கு டிஷ்ஷ பரிமாறுறதுக்கு
செய்முறை :
- குக்கர்ல சின்ன உருளைக்கிழங்க போட்டு அது மூல்குற அளவுக்கு தண்ணீ ஊத்தி ஒரு 2 இல்ல 3 விசில் விட்டு வேக வச்சுக்கோங்க.
- வேக வச்ச சின்ன உருளைக்கிழங்கோட தோல உரிச்சு ஒரு தட்டுல எடுத்து வச்சுக்கோங்க.
- கடாய அடுப்புல வச்சு கடாய் சூடானதும் உளுந்தம் பருப்பு போட்டுக்கலாம், உளுந்தம் பருப்பு கொஞ்சம் பொன்னிரமா மாறுற வந்ததும்.
- கடலை பருப்ப அதுகூட சேத்து வறுக்கணும், பாத்து வறுக்கணும் கருக்காம
- அடுத்து மல்லி, சீரகம், மிளகு எல்லாத்தையும் அடுத்து அடுத்து சேத்துக்கோங்க
- எல்லாத்தையும் நல்லா வறுத்துக்கோங்க கருக்க விட்ரக்கூடாது.
- இப்போ வருத்தத ஒரு தட்டுல போட்டு ஆறாவச்சுக்கணும்.
- நம்ம வறுத்து வச்சு இருக்க மசாலா கலவைய மிக்ஸியில போட்டு நல்லா அரைச்சுக்கனும், ரொம்ப பொடியா அரைச்சுடக்கூடாது கொஞ்சம் கொர கொறப்பா அரைச்சுக்கோங்க.
- திரும்பி கடாய அடுப்புல வச்சு எண்ணெய் சேத்து எண்ணெய் கஞ்சதும் அதுல நம்ம தட்டுல தோல உரிச்சு வச்சு இருக்க சின்ன உருளைக்கிழங்க சேத்துக்கணும்.
- உருளைக்கிழங்க எண்ணைல போட்டு ஒரு ரெண்டு கிண்டு கிண்டி அடுத்து அதுக்கு மேல நம்ம அரச்சு வச்சு இருக்க மசாலாவ போட்டு நல்லா கிளறி விட்டுக்கணும்.
- கொஞ்சமா தேவையான அளவு உப்பு சேத்து ரெண்டு பெறட்டும் பெறட்டுனா சின்ன உருளைக்கிழங்கு ரெசிபி ரெடி ஆயிடும்.
- இந்த கேரளா ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு ரெசிபிய ரசம் சாதம், தோச, சப்பாத்தி, எல்லா விதமான கலவை சாதத்தோடயும் வச்சு நல்லா சைடு டிஷா வச்சு குழச்சு அடிக்கலாம்.
பரிமாறும் முறை:
- இந்த ரெசிபிய சூடா பரிமாறவும்.
- நீங்கள் விருப்பட்டா , கொத்தமல்லி தழைய வச்சு டெகரேட் பண்ணலாம்.
- இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குறிப்பு:
- உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது, அது அதிகமாக வேகாம பார்த்துக் கொள்ளவும்.
- மசாலா வறுக்கும் போது, தீய மிதமான சூட்டுல வைக்கவும்.
- நீங்கள் விருப்பப்பட்டா, இந்த ரெசிபியில இஞ்சி மற்றும் பூண்டு சேக்கலாம்.
- இந்த ரெசிபியில, நீங்கள் விரும்புற எந்த காய்கறிங்க வேணாலும் சேத்துக்கலாம்.
- இந்த ரெசிபி நீங்களும் ட்ரை பண்ணி உங்க பேமிலிய அசத்துங்க உங்களுக்கு ஃப்ரெசுக்கும் ஷேர் பண்ணி விடுங்க.
சுட சுட சுவையான “முட்டை போண்டா” எப்டி பண்ணலாம்
சுட சுட சுவையான "முட்டை போண்டா" எப்டி பண்ணலாம்னு பாக்கலாம்.
முட்ட போண்டா தென் இந்தியல ரொம்ப பேமஸ் ஆனா ரெசிபி மற்றும் விரும்பி சாப்டக்கூடிய ஸ்னாக்ஸ்ல ஒன்னு.இந்த ஸ்னாக்ஸ் மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகவும் டீ காபிக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் ஆகவும் இருக்கு. மேலும் இதுல பலவிதமான சத்துக்களும் இருக்குது.மசாலா உதிரமா முட்ட வெடிக்காமல் முட்டை போண்டா எப்டி பண்ணலாம்னு பக்கலாம்.இந்த ஸ்னாக்ஸ உங்களுக்கு நண்பகளோடும் குடும்பத்தோடும் செஞ்சு சாப்பிட்டுங்க.
தயாரிப்பு நேரம்
20- 30 நிமிடம்
சேவைகள்
3-4 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- ஒரு டம்ளர் கடலை மாவு
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 பெரிய வெங்காயம் (நிளமாக நறுக்கிய)
- 1/4 ஸ்பூன் மிளகு பொடி
- 1/4 ஸ்பூன் சீரகம் பொடி
- பொரிக்க தேவையான எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தேவையான சமையல் உபகரணங்கள்
- கடாய்
- கரண்டி
- கத்தி
- தட்டு
செய்முறை :
- முதல பஜ்ஜி மாவு ரெடி பண்ணிக்கலாம்.
- அதுக்கு ஒரு டம்ளர் அளவுக்கு கடலை மாவ எடுத்துக்கணும்.
- உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,வெங்காயம் ஊதுத்து விட்டு சேத்துகணும்.
- அடுத்து மிளகு பொடி,சீரக பொடி, தண்ணீ சேத்து இப்போ எல்லாத்தையும் நல்லா மிக்ஸ் பண்ணி நல்லா திக்கா பிசஞ்சுகணும்.
- உப்பு கொஞ்சம் சில்லுனு இருக்குற மாதிரி பாத்துக்கணும் இல்லனா சப்புனு இருக்கும்.
- வேக வச்ச முட்டைய பாதியா கட் பண்ணி அதுல முக்கி எண்ணைல்ல பொறுச்சு எடுத்தா சூப்பர் ஆன முட்டை போண்டா ரெடி.
பரிமாறும் முறை:
- முட்டை போண்டாவை சூடாக பரிமாறவும்.
- முட்டை போண்டாவை தக்காளி சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறலாம்.
- முட்டை போண்டாவை தேநீர் அல்லது காபியுடன் பரிமாறலாம்.
குறிப்பு:
- முட்டை உடையாமல் இருக்க எண்ணெய் ரொம்ப சூடா இருக்காத மாதிரி பாத்துகோங்கு .
அவியல் வீட்டிலேயே எப்படி சுவையாக கேரளா ருசியில் சமைப்பது? Kerala Style Aviyal seivathu Recipe in tamil
அவியல் வீட்டிலேயே எப்படி சுவையாக கேரளா ருசியில் சமைப்பது? Kerala Style Aviyal seivathu Recipe in tamil
அவியல் அப்படினா கேரளாவின் பிரபலமான காய்கறி குழம்பு. இது எல்லா விதமான காய்கறிகளைக் கொண்டு தயாரிப்பாங்க, இன்னும் இது ரொம்ப சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. அவிyal பொதுவா சாதம் அல்லது சப்பாத்தி கூட சாப்பிடப்பிடலாம்.
தயாரிப்பு நேரம்
30 நிமிடம்
சேவைகள்
8-10 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- கேரட் - 1
- பீன்ஸ் - 1/2 கப்
- உருளைக்கிழங்கு - 1
- கத்தரிக்காய் - 1
- முருங்கைக்காய் - 1/2 கப்
- வெள்ளரிக்காய் - 1/2 கப்
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- புளி - சிறிய துண்டு
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- மிளகாய் - 2
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்து - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தயிர் - 1/4 கப்
செய்முறை :
- எல்லா காய்கறிகளையும் நல்லா கழுவி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில தண்ணீ எடுத்து கொதிக்க வைங்க. அதில் காய்கறிகளை போட்டு வேக வைக்கனும்.
- வேகவச்ச காய்கறிகள ஒரு பௌல எடுத்து வைச்சுகோங்க.
- ஒரு மிக்ஸி ஜாரில தேங்காய் துருவல், மிளகாய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை மற்றும் கொஞ்சமா தண்ணீ சேர்த்து அரைச்சுகோங்க.
- ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி காஞ்ச பிறகு, கடுகு, உளுந்து சேர்த்து தாளிச்சுகோங்க.
- அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்குங்க.
- அப்பறம் வேகவைச்ச காய்கறிகளையும், புளியையும் சேர்த்து கிளருங்க.
- தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீ விட்டு கொதிக்க வைக்கணும்.
- கொதி வந்ததும் தீயை குறச்சு, மூடி போட்டு 5 நிமிசம் கொதிக்க விடனும்.
- பிறகு தயிர் சேர்த்து நல்லா கிளறி இறக்கனும்.
Suvaiyana Kerala Style Aviyal ready
பரிமாறும் முறை:
- அவியல் சாதம் அல்லது சப்பாத்தி உடன் சாப்பிடலாம். இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு.
குறிப்பு:
- அவியல் தயாரிக்க பலவிதமான காய்கறிகளைப் பயன்படுத்தலாம்.
- புளிக்கு பதிலாக தக்காளிப் பழத்த பயன்படுத்தலாம்.
- அவியல் தயாரிக்கும் போது, காய்கறிகளை அதிக நேரம் வேகவைக்க வேண்டாம். ளிக்கு பதிலாக தக்காளிப் பழத்த பயன்படுத்தலாம்.
அவியல் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரள உணவு. இது எளிதா தயாரிக்கலாம் மற்றும் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். நீங்களும் வீட்டில் அவியல் தயாரிச்சு சாப்பிடுங்க. Easy aviyal recipe in tamil the best recipe keral style aviyal
வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி – Chicken chettinad gravy recipe in Tamil
வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி - Chicken chettinad gravy recipe in Tamil
பிரமாதமான செட்டிநாடு சிக்கன் ரெசிபி செய்யலமா?செட்டிநாடு சிக்கணு சொன்னதுமே அட நமக்கு பிடிச்ச ரெசிபி ஆச்சேனு தோனும் ஏன்னு கேட்டிங்கனா அதுல இருக்குற தேங்காய், மசாலா எல்லாமே மிக்ஸ் பண்ணி அரச்சு போட்டு சிக்கன சமைப்பாங்க.அந்த சிக்கன நம்ம எப்படி பண்ணலாம்னு பார்க்கப்போறோம்.நல்லா காரசாரமா சாப்பிட ஆசையா இந்த செய்முறைய செஞ்சு பாருங்க மறக்கவே மாட்டிங்க.
தயாரிப்பு நேரம்
1-1.5 மணி நேரம்
சேவைகள்
6 -8 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- சிக்கன் -1 கிலோ
- துருவிய தேங்காய் -1/2 முடி
- வெங்காயம் - 3
- தக்காளி - 4
- காஞ்ச மிளகாய் - 10 -15
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- மல்லி - 3/4 டீஸ்பூன்
- இலவங்கம் -1/2 துண்டு
- கிராம்பு - 3
- பிரியாணி இலை - 1
- கல்பாசி - சிறிய அளவு
- சோம்பு - 3/4 தேக்கரண்டி
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
- தனியா தூள் - 3/4 தேக்கரண்டி
- உப்பு , கறிவேப்பிலை , கொத்தமல்லி- தேவைப்படும் அளவு
தேவைப்படும் பத்திரங்கள்
- 1 மண் சட்டி
- 1 கரண்டி
செய்முறை :
- அடுப்பில் மண் சட்டி வச்சு எண்ணெய் ஊத்திகோங்க ,சோம்பு 1/2 தேக்கரண்டி போட்டு.
- அடுத்து மிளகு,சீரகம் முழு கறமசாலா, காஞ்ச மிளகாய் அதுக்கு அப்பறம் மல்லி, கல்பாசி, அடுத்து கறிவேப்பிலை போட்டுகோங்க.
- துருவி வச்சு இருக்க தேங்காய் போட்டு நல்ல பொன்னிறமாக வறுத்துட்டு அடுப்பை அணைச்சுட்டு அத ஒரு சின்ன தட்ல மாத்திக்க
- சூடு ஆறினதும் மிக்ஸி போட்டு தேவையான அளவு தண்ணீ ஊத்தி நல்லா நுண்ணமா அரச்சு எடுத்துக்கணும்.
- மண் சட்டில கொஞ்சம் எண்ணெய்,அதுக்கு அப்பறம் சோம்பு பட்டை, இலவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- நறுக்கி வச்சு இருக்க வெங்காயம், கறிவேப்பிலை இதலாம் போட்ட பிறகு நல்ல பொன்னிறமா வெங்காயத்தை வதக்கி எடுத்துக்கோங்க.
- இது கூடவே 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நல்ல வதக்கியதும் தக்காளி,மஞ்சள் தூள் உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் நல்லா வதக்கணும்.
- வதக்கி முடுச்ச பிறகு தண்ணீ கொஞ்சம் ஊத்தி நல்லா கொதிக்கவிடுங்க,
- பிறகு நறுக்கி வச்சு இருக்க சிக்கன போட்டுகோனும்.எல்லாமே போட்டு வதக்கி முடிச்ச பிறகு அதுக்கு மேலேயே கொஞ்சம் கொத்தமல்லியும் போட்டுக்கணும்.
- இதுக்கு அப்பறம் அரச்சு வச்சு இருக்க விழுத இதுல ஊதிக்கணும்.
- இப்ப இந்த விழுதோட, சிக்கன்,மசாலா எல்லாத்தையும் நல்ல மிக்ஸி பண்ணுங்க தேவையான அளவு கொஞ்சம் தண்ணீ ஊத்தி நல்லா கொதிக்க விட்டு மூடி போட்டு மூடவும்.
- நல்ல கொதுச்சு வந்ததும் அதுமேல கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு கொஞ்சமா நல்ல எண்ணெய் ஊத்தி நல்லா கிளறி விட்டு அப்படியே சுட சுட சாதத்துல போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
- இந்த ரெசிபிய மதிய சாப்பாட்டுக்கு பண்ணினாலும் இதே கிரெவிய இரவு தோசயோடு சாப்பிட்டால் ரொம்ப பிரமாதமா இருக்கும்.
குறிப்புகள்
- கல்பாசி இந்த செட்டிநாடு சிக்கனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் மறந்துடாதீங்க.
- கறிவேப்பிலை,காஞ்ச மிளகாய் கொஞ்சம் அதிகமாகவே போட்டுகலாம்.அதுக்கு பதிலாக தனி மிளகாய் தூளை குறைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி பூண்டு விழுதை போட்ட பிறகு ஒரு 2 நிமிடம் கழிச்சு தக்காளி போடுங்க
- தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் சரி சமமாக எடுத்து கொள்ளுங்க.
- சிக்கனை போட்டது தண்ணீர் ஊத்த கூடாது.






