அசைவ பிரியர்கள் அனைவருமே ஆட்டுக்கறிய விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டிக்கறியை மட்டுமின்றி, ஆட்டின் ஈரல், குடல், தலை, மூளை என்று எல்லா பாகங்களையும் விரும்பி சாப்பிடுவாங்க. இது எல்லாமே ரொம்ப சுவையாக இருப்பதோடு நிறைய சத்துக்களையும் கொண்டுள்ளது ஆட்டு மூளையில் இரும்புசத்து, புரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகமாவே இருக்கு. மேலும் ஆட்டு மூளையில் ஒமேகா-3, நிறைய இருப்பதால் இதய நோய் அபாயம் குறையும், இரத்தம் உறைவதையும் தடுக்கிறது, நினைவாற்றல் அதிகரிக்கும். எனவே ஆட்டு மூளையை சாப்பிட்டால், நம் மூளை மட்டுமின்றி இதய ஆரோக்கியமும் மேம்படும்.
இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த ஆட்டு மூளையை கொண்டு சூப்பரான மூளை மிளகு ரோஸ்ட் ரெசிபிய பார்ப்போம். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் பின் மீண்டும் மீண்டும் செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். பெரும்பாலான நபர்களுக்கு இந்த ஆட்டு மூளை பிடுக்காது எனது சொல்வது உண்டு. ஆனால் அவர்களுக்கு ஆட்டு மூளையை இந்த மாதிரி மூளை மிளகு ரோஸ்ட் செய்தால் ருசித்து ருசித்து சாப்டிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். எளிய செய்முறை, குறைந்த நேரம், அதிக சுவை – இதுதான் இந்த மூளை வறுவலின் சிறப்பு!. அதனால் இன்று இந்த மூளை மிளகு ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தயாரிப்பு நேரம்
40 நிமிடம்
சேவைகள்
2-3 நபர்
- ஆட்டுமூளை – 2 (நன்கு சுத்தம் செய்தது)
- எண்ணெய் – 2 மேசை கரண்டி
- வெங்காயம் – 150 கிராம் (2 நடுத்தர வெங்காயம், நறுக்கியது)
- தக்காளி – 1 (நறுக்கியது)
- உப்பு – 1 முதல் 1½ டீஸ்பூன் (ருசிக்கு ஏற்ப)
- மஞ்சள் தூள் – ½ மேசை கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் – 2 மேசை கரண்டி (ருசிக்கு ஏற்ப)
- பூண்டு (நசுக்கியது) – 1 மேசை கரண்டி
- இஞ்சி (நசுக்கியது) – 1 மேசை கரண்டி
- கறி மசாலா – 1 மேசை கரண்டி
- மிளகு தூள் – 3 மேசை கரண்டி (அல்லது ருசிக்கு ஏற்ப)
- கருவேப்பிலை – 1 கொத்து
- தண்ணீர் – ¼ கப்
- 1 அடிகனமான கடாயுடன் கூடிய மூடியுடன்
- 1 கரண்டி (தட்டுக்கரண்டி)
- 1 கிண்ணம் (மூளை சுத்தம் செய்ய)
- கத்தி மற்றும் வெட்டும் பலகை
- 1. மூளை சுத்தம் செய்யும் முறை
- மூளையை குளிர்ந்த தண்ணீரில் நன்கு கழுவி, வெளிப்புற படலங்களை மெதுவாக நீக்கவும்.
- விருப்பப்படி, வெந்நீரில் 1–2 நிமிடம் நன்றாக கொதிக்கவைத்து பிறகு படலத்தை நீக்கலாம் (ஈசியா கையாளலாம்).
- மசாலா தயார் செய்ய
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் சிவக்க தக்காளி, உப்புடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு பூண்டு, இஞ்சியையும் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
- மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- மசாலா சேர்த்தல்
- இப்போது கறி மசாலா, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
- கருவேப்பிலையும் சேர்த்து சிறிதளவு (¼ கப்) தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- மூளை சேர்த்து வேகவைக்க
- சுத்தம் செய்த மூளையை மெதுவாக மசாலாவுக்கு மேலே வைக்கவும் (இது மிருதுவானது, அதனால் கிளற வேண்டாம்).
- மூடியை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
- பிறகு மெதுவாக ஒரு தட்டுக் கரண்டியால் திருப்பி மறுபடியும் மூடி 5–7 நிமிடம் வேகவைக்கவும்.
- இறுதி கட்டம்
- மூடியை எடுத்து, தேவைப்பட்டால் மீண்டும் 2–3 நிமிடம் திறந்து வதக்கி வற்ற வைக்கவும்.
- உப்பு மற்றும் காரம் சரிபார்த்து சரி செய்யவும். மூளை மிளகு ரோஸ்ட் சுவைப்பதற்கு ரெடி ஆகிவிட்டது. சூடாக பரிமாறவும்.
- சாதம், சப்பாத்தி, பரோட்டா, நானுடன் பரிமாறலாம்.
- விருப்பப்படி கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
- மூளை சுத்தம் செய்யும் போது வெந்நீரில் 1–2 நிமிடங்கள் வைத்து பிறகு மென்மையாக தோல் உரித்தால் எளிதாக சுத்தம் செய்யலாம்.
- காரம் குறைவாக விருப்பமெனில் மிளகாய்த்தூள் மற்றும் மிளகு தூளின் அளவை குறைக்கலாம்.
- முடிவில் கொஞ்சம் நெய் சேர்த்தால் அதிக சுவை கிடைக்கும்.
- வெந்துவிட்டதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்? மூளை கருகாமல் உருளி வடிவத்தில் பதப்படும்; மசாலா சாறு ஒட்டியிருக்கும்.
மென்மையான மூளை, காரமான மிளகு, மணமணக்கும் மசாலா — இவை ஒன்றாக சேர்ந்தாலே ஒரு உணவுப் வகை உருவாகும். இந்த மூளை மிளகு ரோஸ்ட், சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் தரும் அற்புத உணவாகும். இதை ஒருமுறை செய்து பாருங்கள்; உங்கள் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் விரும்புவார்கள். சனி, ஞாயிறு மதிய உணவிற்கு இது போல செம்ம பக்காவான ரெசிபி வேறில்லை!

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
ஆப்கானிஸ்தானின் சுவை: சுவையான ஆப்கானி ஆம்லெட் (ககினா) செய்வது எப்படி -
பிரஷர் குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி - Pressure Cooker Chicken Biryani seivathi epdi in Tamil -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

Add a Comment