தஞ்சாவூர் மீன் வறுவல்
தஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வருவது அதன் பெருமைமிக்க கோவில்கள், கலாச்சாரம், இசை, ஓவியம் மட்டும் அல்ல; அதே சமயம் அந்த மண்ணின் சமையல் கலையும் தனி முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த பாரம்பரிய ருசிகளில் ஒன்று தான் இந்த “தஞ்சாவூர் மீன் வறுவல்”.
நல்ல வாடை கொடுக்கும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து அரைத்த மசாலா பேஸ்ட், மேலே ஊறவைத்த மிளகாய்த்தூள் கலவையோடு கலந்து, நன்கு ஊறவைத்து வறுக்கும் போது எழும் மணமே வீட்டை முழுக்க எங்கும் பரவி, உங்களைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும்.சாதம், சாம்பார், ரசம் என எந்தவொரு உணவோடும் ஜோடியாகும் இந்த மீன் வறுவல், ஒருமுறை சுவைத்தால் மறக்கவே முடியாத ஒரு உணவாக மாறும். இது ஒரு சாதாரண வறுவல் அல்ல—இதுவே தஞ்சாவூரின் அடையாளம்!
தயாரிப்பு நேரம்
30-40 நிமிடம்
சேவைகள்
6-7 நபர்
தேவையான பொருட்கள்:
- மீன் வறுவல் பேஸ்ட்டுக்கு:
- சின்ன வெங்காயம் -5
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - சின்ன துண்டு
- தக்காளி- 1
- பச்சை மிளகாய் - 1
- கொத்தமல்லி
- கறிவேப்பிலை
- சோம்பு- 1 டீஸ்பூன்
- மிளகு - 1டீஸ்பூன்
- தேங்காய் - துருவியது
- 10 பெரிய மீன் துண்டுகள்
- தனி மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - 100 கிராம்
தேவையான சமையல் உபகரணங்கள்
- மிக்ஸி - மீன் வறுவல் பேஸ்ட் தயாரிக்க
- கடாய் - - மீன் பொரித்து எடுக்க
- கிண்ணம் - வறுத்த மீன் எடுத்து வைக்க
- தட்டு
செய்முறை :
- முதல மிக்ஸியில வெங்காயம் ,பூண்டு,இஞ்சி - சின்ன, தக்காளி,பச்சை மிளகாய் ,கொத்தமல்லி,கறிவேப்பிலை, சோம்பு, மிளகு,தேங்காய் துருவியது எல்லாத்தையும் சேத்து நல்லா பேஸ்ட் பதத்துக்கு அரச்சு எடுத்துக்கோங்க.
- இப்போ மிளகாய்தூள், மஞ்சள்தூள்,உப்பு எல்லாவற்றையும் கொஞ்சம்தண்ணீர்ஊற்றிபிசைந்து வைத்துக்கொள்ளவும்.மீன்துண்டுகளை நல்லா கழுவி இந்த மசாலாவயும் நம்ம அரச்சு வச்சுருக்க மசாலா பேஸ்டையும் அப்பிடியே மீன் துண்டுகள் மேல தடவி, 1 மணிநேரம் ஊற விடவும்
- பின் ஒரு அகலமான வாணலியை அடுப்புல வைச்சு கொஞ்சம் அதிகமாக எண்ணெய்விட்டு மீன்களைப் பொரிக்கவும்.
- மெதுவாக பிரட்டி விடவும்.கருவேப்பிலையும் அதுகூட சேர்த்துக்கோங்க.
- சுவையான fish fry ரெடி ஆயிடுச்சு.சாப்பிட்டு ருசிங்க.😊
- பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோணும் இந்த தஞ்சாவூர் fish fry.
பரிமாறும் முறை:
- தயார் செய்த Fish Fry-யை வெதுவெதுப்பாக பரிமாறவும்.
- பக்கவட்டில் வெங்காய வதக்கல், எலுமிச்சை துண்டுகள் மற்றும் கொஞ்சம் புதினா இலைகள் வைத்தால் மேலும் அருமை.
- சாதம், சாம்பார் அல்லது ரசத்துடன் அல்லது சாதாரண வதைக்கப்பட்ட சோறுடனும் மிகவும் நன்றாக ஜோடியாகும்.
- மீன் வறுவலை பரிமாறும் போது மேல் கொஞ்சம் உருண்ட கருவேப்பிலை மற்றும் எண்ணெயில் வதக்கிய வெங்காயம் தூவலாம்—சாதாரண உணவையும் பண்டிகை உணவாக மாற்றும்
குறிப்பு:
- கடலைமாவு அல்லது அரிசிமாவு சிறிதளவு சேர்த்தால், மேல் தோலை crisp ஆக வறுக்கலாம்
- எண்ணெய் நன்றாக சூடான பிறகே மீன் போடவேண்டும், இல்லையெனில் அது உடைந்து விட வாய்ப்பு உண்டு
- வதக்கும் போது மீனை மெதுவாக திருப்பவும், இல்லையெனில் உடல் சிதறும்
தஞ்சாவூர் Fish Fry என்பது சாதாரணமான மீன் வறுவலை விட தனி அழகு கொண்டது. அது ஒரு குடும்பத்தை விருந்து பரிமாறும் அளவுக்கு கொண்டு செல்லும் விருந்தாக மாறும். இதயத்தை வருடும் அந்த மணமும், வாயில் கரையும் அந்த சுவையும் இந்த பாரம்பரிய ரெசிப்பியை காலத்தால் அழியாத ஒன்றாக மாற்றுகிறது. நீங்கள் இது வரை சாப்பிட்டிருக்கிறீர்களா என்றால், மீண்டும் சாப்பிட மனம் போகும்.
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல!
-
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து
-
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல்
-
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து
-
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்!
-
ஆப்கானிஸ்தானின் சுவை: சுவையான ஆப்கானி ஆம்லெட் (ககினா) செய்வது எப்படி
-
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!
-
ஆட்டுக்கால் பாயா ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா செய்முறை
-
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்!
-
Chicken Samosa: A Delicious Snack Recipe
Add a Comment