"Authentic Mysore Pak Recipe in Tamil | மென்மையான மைசூர் பாக் செய்முறை வீட்டிலேயே"
மைசூர் பாக் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் புகழ்பெற்ற, நெய்யில் தயார் செய்யப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பாகும். இதன் வரலாறு மைசூரின் ராஜ சமயலறையில் துவங்கியது. இன்று, இது இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக திருப்பதி மற்றும் பாண்டியன் நாடுகளில், விசேஷங்களிலும் தீபாவளி போன்ற பண்டிகைகளிலும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
இந்த இனிப்பின் சிறப்பாகும் – அதன் மென்மையும், வாயில் கரையும் தன்மையும். மிகச் சில பொருட்களைக் கொண்டு, மிகச் சிறிய நேரத்திலேயே தயாரிக்கக்கூடிய இந்த இனிப்பு, விருந்தோம்பலிலும் பரிசுகளாகவும் பரிமாறப்படுகின்றது.
மைசூர் பாக் தயாரிக்க சிறிது உழைப்பு தேவைப்படும் நேர்த்தியான செய்முறை இருந்தாலும், ஒருமுறை முறையாக செய்து பார்த்தால், அதன் சுவை மீண்டும் மீண்டும் செய்வதற்கே தூண்டிவிடும். இதில் பயன்படுத்தப்படும் நெய் மற்றும் சர்க்கரையின் தரம் மிகவும் முக்கியம்.
இனி, எளிமையான முறையில் வீட்டிலேயே இந்த இனிப்பை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். வீட்டில் உள்ள சில முக்கிய சமையல் உபகரணங்கள் இருந்தாலே போதும் – சுவையான மைசூர் பாக் தயாராகும்!
தயாரிப்பு நேரம்
சுமார் 1 மணி நேரத்தில் தயார்
சேவைகள்
4-6 நபர்
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 1 கப்
- நெய் – 1 கப் (ஹீட் செய்து வைத்தது)
- சக்கரை – 1.5 கப்
- தண்ணீர் – ½ கப்
தேவையான சமையல் உபகரணங்கள்
- பெரிய நான்ஸ்டிக் வாணலி அல்லது கிளீன் கடாய்
- கிளறும் கரண்டி
- சல்லடை ( கடலை மாவுக்கு)
- ஸ்பேட்டுலா: கிளறி மற்றும் கலப்பதற்கு.
- மேசை மேல் வைத்துக்கொள்ள நெய் தடவிய தட்டு
- டம்ளர் அல்லது அளவுக் கப்
- கத்தி (மைசூர் துண்டுகளாக வெட்ட)
செய்முறை
- கடலை மாவை நல்லா சலிச்சு, ஒரு கடாயில ஐஞ்சு நிமிசம் வதக்குங்க. வாசனை வரவரைக்கும் வதக்கனும்.
- வேறு ஒரு கடாயில சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கோங்க – ஒரு நல்லா கெட்டியான நூல் பாதத்துக்கு வந்ததும் சமயலுக்கு தயாராகிடும்.
- அதுல வதக்கி வச்சு இருக்க கடலை மாவை மெது மெதுவா கட்டு சேராம கலந்துவிட்டுக்கோங்க.
- அதுல நெய்ய கொஞ்ச கொஞ்சமா சேர்த்துகிட்டே தொடக்கத்தில இருந்து கடைசி வரைக்கும் கிளறிக்கிட்டே இருங்க.
- இந்த கலவ பக்கவாட்டில விலகி பொங்கி வரும் சமயத்துல , நெய் தடவிய தட்டில ஊத்திருங்க.
- கொஞ்ச நேரம் ஆறுனதும் கொஞ்சமா நார்மல் சைஸ் பீஸ்ஸா வெட்டிட்டா சூப்பரா ஆன டிரேடிஸ்னல் ஆன மென்மையான நெய் மைசூர் பாக் செய்முறை வீட்டியே நமக்கு தயார் ஆயிடுச்சு.
பரிமாறும் முறை
- ஒரு தோசை தட்டில் மைசூர் பாக் துண்டுகளை வைக்கவும். மேலே சிறிது பிஸ்தா தூவி அலங்கரிக்கலாம்.
- நேரடியாக டிபன் பாக்ஸில் குழந்தைகளுக்கு அல்லது பரிசுப் பெட்டியில் பேக் செய்து பரிமாறலாம்.
- நெய்யின் மணமும், இனிப்பும் இருக்கும் இந்த இனிப்பு சூடாக இருந்தாலும் சுவையாக இருக்கும்,
குறிப்பு
- நல்ல நெய் பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.
- ரொம்ப கெட்டியா காய்ச்சினால் பாக் கற்பட்டுயாகிடும், அதனால் பொங்கும் நிலைக்கு வந்ததும் ஆவலுடன் இறக்கவும்.
மைசூர் பாக் என்பது தமிழரின் இனிப்புகளுக்குள் ஒரு மைல்கல். நம்மைச் சுற்றியுள்ள பல இனிப்புகளுக்குள் இதன் தனித்துவமான சுவையும், நெய்யின் அழுத்தமும், அதனை மிகப் பிரபலமாக்கியுள்ளது.இதை வீட்டிலேயே செய்தால்தான் உண்மையான சுவையை அனுபவிக்கலாம். Hemalatha Suriyakumar வின் இந்த முறையில் செய்வதனால், உங்கள் வீட்டிலும் ஒரு சிறிய ஸ்வீட் ஷாப்பின் வாசனை மற்றும் சுவை ஏற்படும்.
Search.......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!





